தமிழ்நாட்டில் ஒரேநாளில் 28 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது இந்திய சாதனை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனாவை தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இன்று 28 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை! இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை. மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு நன்றி. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ளுங்கள்! நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!” ” எனப்பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்களில் ஒரேநாளில் 28.20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்த நிலையில் இலக்கை தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 40,000 முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
18-44 வயது 16,00,195 பேருக்கும், 45-60 வயது 8,69,741 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,47,164 பேருக்கும் ஒரேநாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
TN Corona Update: மதுரையில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு; சிவகங்கையில் 19 !