தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள், திரைபிரபலங்கள் மற்றும் திமுக தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன.  இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் ஹேஷ்டேக் ட்விட்டரில் அகில இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. #HBDMKStalin70 என்ற ஹேஷ்டேக் அகில இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 


ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல்வர்


ட்விட்டர் தளத்தில் ஒவ்வொரு நாளும் எதாவது ஒன்று டிரெண்டிங்கில் இருக்கும். சில நேரங்களில் எப்படி தொடங்கியது என்று தெரியாமல் கூட சில ட்ரெண்டிங் ஹேஷ்டேக் உருவாகி உள்ளன.


அப்படிதான் இன்று தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்  தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தொண்டர்கள் என பலரும் சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் மு.க.ஸ்டாலினின்  புகைப்படத்துடன் ட்விட்டரில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்விட்டர் டிரண்டிங்கில் #HBDMKStalin70 என்கிற ஹேஷ்டேக் அகில இந்தியா அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 


மரியாதை





தனது 70ஆவது பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  மேலும் அவருடன் திமுக தொண்டர்கள் பலரும் உடனிருந்தனர். 


குவியும் வாழ்த்துகள்


70வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பதிவில், “70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர்  திரு. மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டிருந்தார். 


மேலும், தமிழக முதல்வர் திரு. முக ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று பாஜக மாநில அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுபோன்று பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.