முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்தநிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.






இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், தளபதி முக ஸ்டாலின் அவர்கள் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார். 


நடிகர் சரத்குமார் வாழ்த்து:


திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 70 - வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கின்ற இந்த நன்னாளில் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.






சென்னை மாநகர மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று நிர்வாக பணிகளை சீரும், சிறப்புமாக மேற்கொண்டு வரும் தாங்கள், இந்தியாவின் தலைசிறந்த முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை முன்னேற்றம் அடையச் செய்ய எடுக்கும் முயற்சிகள் வெற்றி காண வாழ்த்துகிறேன்.


மேலும், வாழ்வின் அனைத்து வளமும், நலமும் பெற்று, நீண்ட ஆயுளோடும், பூரண ஆரோக்கியத்துடனும் தாங்கள் நீடுடி வாழ நல்வாழ்த்துகளை பகிர்கிறேன்.


உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து: 


முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்தினை தெரிவித்தார். 


முதலமைச்சருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து:


முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். 


கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து:


அன்புத் தோழர் முக ஸ்டாலினுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.






கேரளா-தமிழ்நாடு பிணைப்பை வலுப்படுத்த உங்கள் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. கூட்டாட்சி, மதச்சார்பின்மை மற்றும் எங்கள் தாய்மொழிகளின் பாதுகாப்பில் நின்று, நீங்கள் நாடு முழுவதும் இதயங்களை வென்றுள்ளீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றியை விரும்புகிறேன்!


தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து:






இன்று 70வது பிறந்த நாள் காணும், தமிழக முதல்வர் , திமுக தலைவர், அன்பு சகோதரர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்.