கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் தங்க நகைகள் வரை அடகு வைத்து கடன் பெற்றவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Continues below advertisement

சட்டசபையில்_முதலமைச்சர்_முக.ஸ்டாலின்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 13-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவற்றில், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் தங்க நகைகள் வரை அடமானம் வைத்துள்ளவர்களுக்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறப்பதை தடுப்பதற்காக உயிர்காப்பு பிரிவு தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.