மேலும் அறிய

விழுப்புரம் அருகே சோழர் கால வைஷ்ணவி, கௌமாரி, புத்தர் சிலைகள் கண்டுபிடிப்பு! வியக்க வைக்கும் வரலாறு!

ஆலகிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தைச் சேர்ந்த வைஷ்ணவி தேவி, கௌமாரி மற்றும் பௌத்த சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்: திண்டிவனம் அருகே ஆலகிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தைச் சேர்ந்த வைஷ்ணவி தேவி, கௌமாரி மற்றும் பௌத்த சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

1000 ஆண்டுகள் பழமையான வைஷ்ணவி தேவி, கௌமாரி மற்றும் பௌத்த சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலகிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தைச் சேர்ந்த வைஷ்ணவி தேவி, கௌமாரி மற்றும் பௌத்த சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது., வைஷ்ணவி தேவி - ஆலகிராமம், செக்கடி தெரு சந்திப்பில் பாதியளவு மண்ணில் புதைந்தும் புதர்கள் அடர்ந்துள்ள பகுதியில் வைஷ்ணவி தேவி சிற்பம் காணப்பட்டது. நான்கு கரங்களுடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். தேவியின் முன்னிரு கரங்களில் வலது கரம் அபய முத்திரையிலும், இடது கரம் தொடை மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன. பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தி இருக்கிறாள். அழகிய தலை அலங்காரம், அணிகலன்களுடன் அழகே உருவாகக் காட்சி தருகிறாள் வைஷ்ணவி தேவி.

கௌமாரி சிற்பம்

செல்லியம்மன் கோயில் வளாகத்தில் கௌமாரி சிற்பம் காணப்படுகிறது. வலது காலை மடித்தும், இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். அழகிய ஆடை அணிகலன்கள் மற்றும் சன்னவீரம் எனப்படும் வீரச்சங்கிலி அணிந்து புன்முறுவல் பூத்த நிலையில் மிகுந்த கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வைஷ்ணவி, கௌமாரி சிற்பங்கள் சோழர் காலத்தைச் (கி.பி.10-ம் நூற்றாண்டு) சேர்ந்தவை. இதனை மூத்த தொல்லியலாளர் கி.ஸ்ரீதரன் உறுதிப்படுத்தி உள்ளார். ஒரு காலத்தில், இவை சிவன் கோயில் வளாகத்தில் இருந்திருக்க வேண்டும். எப்படியோ வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன.

பௌத்த சிற்பம்

ஜெயினர் கோயில் தெரு ஓரத்தில் புதர்கள் மண்டிய இடத்தில் பௌத்த சிற்பம் காணப்படுகிறது. அமர்ந்த நிலையில் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். பிண்ணனியில் ஐந்து தலை நாகம் காட்டப்பட்டுள்ளது. இவர் பௌத்த சமயத்தைச் சார்ந்த அவலோகிதேஸ்வரர் ஆவார். இந்த சிற்பத்தின் காலமும் கி.பி.10ம் நூற்றாண்டாகும். இதேபோன்ற சிற்பம் பிரான்மலை அருகாமையில் உள்ள திருக்கோளக்குடி பகுதியில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள மூத்த கல்வெட்டு ஆய்வாளர் விஜயவேணுகோபால், விழுப்புரம் மாவட்டத்தில் பௌத்தம் பரவியிருந்ததற்கு இந்த சிற்பம் சான்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆலகிராமத்தில் உள்ள மேற்காணும் 3 சிற்பங்களும் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தவை. மேலும் இப்பகுதியில் கல் வெட்டுடன் கூடிய பலகைக் கல் ஒன்று மண்ணில் புதைந்துள்ளதால் இதிலுள்ள தகவலை அறிய இயலவில்லை.

ஆலகிராமத்தில் ஏற்கனவே பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி, ஐயனார், முருகன், லகுலீசர், விஷ்ணு சிற்பங்கள் அமைந்துள்ளன. தற்போது சோழர் கால சிற்பங்களும் கண்டறியப் பட்டிருப்பது இந்த கிராமத்தின் வரலாற்று சிறப்பை நமக்கு உணர்த்துகின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த சிற்பங்களை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Gold Rate Today: உடனே புறப்படுங்க.. ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் குறைந்த தங்கம் விலை - இன்ப மழையில் மக்கள்!
Gold Rate Today: உடனே புறப்படுங்க.. ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் குறைந்த தங்கம் விலை - இன்ப மழையில் மக்கள்!
CTET 2025: கனவு காண்போருக்கு காத்திருப்பு! தாமதமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை; கவலையில் தேர்வர்கள்!
CTET 2025: கனவு காண்போருக்கு காத்திருப்பு! தாமதமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை; கவலையில் தேர்வர்கள்!
Artificial Rain: டெல்லியில் திடீரென பெய்த செயற்கை மழை.. எதற்காக தெரியுமா?
Artificial Rain: டெல்லியில் திடீரென பெய்த செயற்கை மழை.. எதற்காக தெரியுமா?
Chennai Power Cut: சென்னையில அக்டோபர் 29-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில அக்டோபர் 29-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Slams DMK | ”வீட்டுக்கு போவது உறுதி விவசாயிக்கு என்ன பண்ணீங்க” comeback கொடுத்த விஜய்
TVK Vijay | ’’20 லட்சம் வேணாம்விஜய் நேர்ல தான் வரணும்’’பணத்தை திருப்பி கொடுத்த பெண்
Manickam Tagore On Selvaperunthagai | டெபாசிட் இழந்த மாணிக்கம் தாகூர் வேட்டியை மடிக்கும் செ.பெருந்தகை
நீர்வளத்துறையில் சாதி செ.பெருந்தகை சொன்னது உண்மை? வெளியான திடுக்கிடும் தகவல்கள் | Selvaperunthagai VS Duraimurugan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Today: உடனே புறப்படுங்க.. ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் குறைந்த தங்கம் விலை - இன்ப மழையில் மக்கள்!
Gold Rate Today: உடனே புறப்படுங்க.. ஒரே நாளில் ரூபாய் 3 ஆயிரம் குறைந்த தங்கம் விலை - இன்ப மழையில் மக்கள்!
CTET 2025: கனவு காண்போருக்கு காத்திருப்பு! தாமதமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை; கவலையில் தேர்வர்கள்!
CTET 2025: கனவு காண்போருக்கு காத்திருப்பு! தாமதமாகும் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை; கவலையில் தேர்வர்கள்!
Artificial Rain: டெல்லியில் திடீரென பெய்த செயற்கை மழை.. எதற்காக தெரியுமா?
Artificial Rain: டெல்லியில் திடீரென பெய்த செயற்கை மழை.. எதற்காக தெரியுமா?
Chennai Power Cut: சென்னையில அக்டோபர் 29-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில அக்டோபர் 29-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? விவரம் இதோ
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Amazon Layoff: ஒரே வாரம்.. 30 ஆயிரம் பேரை தூக்கி வீசும் அமேசான் - AI இருக்கு, உங்களுக்கு சம்பளம் எதுக்கு?
Amazon Layoff: ஒரே வாரம்.. 30 ஆயிரம் பேரை தூக்கி வீசும் அமேசான் - AI இருக்கு, உங்களுக்கு சம்பளம் எதுக்கு?
IIT Madras: இந்தியாவின் பெருமை! ஐஐடி சென்னை 3 பேராசிரியர்களுக்கு ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருது; எதற்கு?
IIT Madras: இந்தியாவின் பெருமை! ஐஐடி சென்னை 3 பேராசிரியர்களுக்கு ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருது; எதற்கு?
Montha Cyclone: வேகத்தை குறைத்த ‘மோன்தா‘ புயல்; எப்போது கரையை கடக்கும்.? திருவள்ளூரில் மிக கனமழை - வானிலை அப்டேட்
வேகத்தை குறைத்த ‘மோன்தா‘ புயல்; எப்போது கரையை கடக்கும்.? திருவள்ளூரில் மிக கனமழை - வானிலை அப்டேட்
Embed widget