முதலமைச்சர் விஜய் 110 விதி அறிவிப்பு
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், பெண்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தவெக அரசின் திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மாற்று எரிபொருளை பயன்படுத்தி வருவதாலும், சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசின் நிதி நெருக்கடியான சூழலிலும் பொதுமக்களின் நிதி சுமையை குறைக்கும் வகையிலும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிடும் வகையிலும், எரிவாயு சிலிண்டர் தொகையை மக்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்
அந்த வகையில், குடும்பத்தலைவிகள் பயன் பெறும் வகையில் முதல் கட்டமாக அன்னாபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். அந்த சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் எரிவாயு பதிவு செய்து சிலிண்டர் பெறப்பட்டதும் எண்ணெய் நிறுவனங்களிடம் பயனாளிகளின் பட்டியல் பெறப்பட்டு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.
யார் யாருக்கு பயன் .?
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்தை 104 குடும்பங்கள் பயன் பெறுவார்கள். ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவகள், சிறு குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் பயன்பெறுவார்கள்.
அன்னாபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் தொடங்கப்படும். இந்த திட்டத்திற்காக ஆண்டிற்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் முதலமைச்சர் விஜய் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
