மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள்

மாணவர்களுக்காகபல்வேறுதிட்டங்களைஅரசுசெயல்படுத்திவருகிறது.அதன்ஒருபகுதியாகதமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம். முதல் தலைமுறை பட்டமளிப்பு (FG) திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம். சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.இதன்அடுத்தகட்டமாகமாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப டிஜிட்டல் திறன் பெற "உலகம் உங்கள் கையில்" என்னும் அறிவூட்டும் கருப்பொருளின் கீழ் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு 20 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இலவச லேப்டாப்- சிறப்பம்சம் என்ன.?

அந்தவகையில்அரசு பொறியியல். கலை மற்றும் அறிவியல். மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கும் 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD , Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில்,

நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் "அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்" என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. ஒவ்வொருமாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது.

அதி நவீன வசதியோடு லேப்டாப்

அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகள், கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி ஆதாரமாக உதவுகின்றன. டிஜிட்டல் திறன்மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் (IT) துறை, மென்பொருள் உருவாக்கம் (Software Development), தரவு உள்ளீடு(Data Entry), டிஜிட்டல்  (Digital Marketing),  (Graphic Design). குறியிடுதல் (Coding). வலை வடிவமைப்பு (Web Designing), செயற்கை நுண்ணறிவு கருவிகள் (Al Tools), சுயாதீன வேலை (Freelancing) போன்ற துறைகளில் "புதிய வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை" என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட உதவுகிறது.

இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தலைமையிலும், துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் நாளை (5.1.2026) திங்கட்கிழமை அன்று மாலை 3 மணியளவில் சென்னைநந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெறுகிறது.