CM Stalin: ரயிலில் இருந்து கெத்தாக இறங்கிய முதல்வர் ஸ்டாலின்... அதிர்ந்த திருப்பத்தூர்.. திமுகவினர் உற்சாகம்.. 4.30 மணிக்கு ரெடியா இருங்க
ஜோலார்பேட்டையை வந்தடைந்த முதல்வருக்கு திமுகவினர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு.

திருப்பத்தூர்: வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோலார்பேட்டையை வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுகவினர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் வந்தடைந்துள்ளார். அவரை வரவேற்கும் விதமாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, அமைச்சர் காந்தி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து திருப்பத்தூர் நகரில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் முதலமைச்சர் ஓய்வு எடுக்கிறார். அதன் பின்னர் 4.30 மணி அளவில் திருப்பத்தூர் நகரத்தில் நகரத்திலிருந்து ரோடு ஷோ மூலம் மாநாட்டிற்கு செல்கிறார்.
அதன் பின்பாக சாலை மார்க்கமாக செல்லும்போது மக்களை சந்தித்து கை அசைத்தபடி மாநாட்டு திடலுக்கு மாலை நேரத்தில் சென்றடைந்து அங்கு கூடியிருக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பேச உள்ளார்.
இந்த மாநாட்டில் 47 சட்டமன்றத் தொதிகளை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் BLA2,BLC,BDA உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் பங்கேற்க உள்ள நபர்களுக்கு சிற்றுண்டிகள் தயார் நிலையில் உள்ளது.

மாநாட்டை முன்னிட்டு திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி மற்றும் மண்டல பகுதியில் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி மாதேஸ்வர் தயால் ஐபிஎஸ் தலைமையில் 2 ஐஜி, 4 டிஐஜி, 13 எஸ்பி, 14 கூடுதல் எஸ்பி, 51 டிஎஸ்பி, 98 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 3 ஆயிரத்து 873 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.























