MK Stalin South Visit: மதுரையில் ஆய்வை துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் தனது முதல் ஆய்வு பயணமாக நேற்று கொங்கு மண்டலம், இன்று தென் மண்டலத்தில் ஆய்வு மேற்கொள்கிறார். அது தொடர்பான அப்டேட்டுகள் இந்த பிளாக்கில் வரும்.
தூக்குக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார். மேலும், தீவிர காயமடைந்த மூன்று பேருக்கும் பணி நியமன ஆணையை வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் அமைக்கப்பட்டுள்ள 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அனைத்து படுக்கைகளும் தனித்தனி மின்விசிறி, ஆவி பிடிப்பதற்கான கருவி பொருத்தப்பட்டுள்ளது.
Background
முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், நேற்று கொங்கு மண்டலங்களில் ஆய்வு பணியை மேற்கொண்டார். அதன் பின் நேற்று இரவு மதுரை வந்த அவர், தற்போது மதுரையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கொரோனா உச்சம் அடைந்து வரும் நிலையில் இந்த ஆயு்வு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனையை முடித்துவிட்டு பல்வேறு பகுதிகளை நேரில் ஆய்வு செய்கிறார். தமிழக அமைச்சர்கள் பலரும் முதல்வர் ஸ்டாலின் உடன் உள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -