மேலும் அறிய

Magalir urimai thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 2,000 உயர்த்தப்படும்.! காலையிலேயே குஷியான அறிவிப்பை சொன்ன ஸ்டாலின்

Magalir urimai thogai: மகளிர் உரிமை தொகையாக தற்போது ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், திமுக ஆட்சி அமைந்ததும் 2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெருங்கும் தேர்தல்- மகளிர் உரிமை தொகை உயர்வு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் மக்களின் வாக்கை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. அதன் படி கடந்த 2021ஆம் ஆண்டு மகளிர் உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக அறிவித்தது. இதனை 2023ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. 

வங்கி கணக்கில் 5ஆயிரம் வரவு

இந்த நிலையில் தற்போது சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதையடுத்து அதிமுக சார்பாக மகளிர் உரிமை தொகை 2ஆயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு போட்டியாக யாரும் எதிர்பார்க்காத நிலையில் இன்று காலை ஏற்கனவே மகளிர் உரிமை தொகை பெற்று வரும் அனைத்து மகளிர் வங்கி கணக்கிலும் 5ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில்,

இன்றைக்குக் காலையில், நம் அரசு சார்பில் 5 ஆயிரம் ரூபாய் உங்கள் கணக்கில் வந்திருக்கும். எதற்காக இந்தப் பணம்? நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தேன். அப்போது, "இது சாத்தியமே இல்லை" எனச் சிலர் சொன்னார்கள். ஆனாலும், நிதி நெருக்கடியைச் சமாளித்து, ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையையும் மீறி, கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை" வெற்றிகரமாகச் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். முதலில், ஒரு கோடியே 13 லட்சம் மகளிருக்குப் பயனளித்த இந்தத் திட்டம். அண்மையில் விரிவுபடுத்தப்பட்டு, தற்போது ஒரு கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இது வெறும் நிதியுதவி அல்ல.

மகளிர் உரிமையை தொகையை தடுக்க சதி

அங்கீகரிப்பதற்காகக் சமூகத்தில் பெண்கள் ஆற்றும் பங்களிப்பை கொடுக்கப்படுகிற உரிமைத்தொகை! இந்தத் தொகையை வைத்து, அன்றாட வீட்டுச் செலவுகள். குடும்பத்தில் ஏற்படும் மருத்துவச் செலவுகள், குழந்தைகளுக்கான கல்விச் செலவுகள், என, பல அத்தியாவசியச் செலவுகளை, மகளிர் தாங்களே நிறைவு செய்ய இந்த திட்டம் வழிவகுத்தது.

அதனால்தான், ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி என்பது. ஒவ்வொரு குடும்பத்தலைவியும் ஆவலோடு எதிர்பார்க்கும் நாளாக அமைந்துள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகிறார்கள். இந்த உரிமைத் தொகையை மேம்படுத்த வேண்டும் என நாம் செயல்பட்டு வந்தால், அதற்கு எதிராக டெல்லியில் இருக்கும் ஒரு கூட்டமும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு அடிமையாக இருக்கும் இன்னொரு கூட்டமும். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, அடுத்த 3 மாதங்களுக்கு இந்த மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த, சூழ்ச்சி செய்வதாகத் தகவல் வருகிறது! இதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் சிலர் முயற்சி செய்வதாகச் செய்திகள் வருகிறது.

ஒரு கோடியே 31 லட்சம் மகளிர் உழைப்பை அங்கீகரிக்கும் இந்த திட்டத்தை 3 மாதம் நிறுத்தி வைத்தால் நீங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என உங்கள் வீட்டில் ஒருவனாக இருக்கும் எனக்கு நன்றாகத் தெரியும். கடும் வெயிலில் வேலைக்குப் போக கடினமான கோடைக்காலத்தில். இந்தத் தொகை நிறுத்தப்பட்டால், உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என என்னால் உணர முடிகிறது. உங்கள் மாதாந்திர செலவை, எப்படி சமாளிப்பீர்கள்? உங்கள் குடும்பத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மாத்திரை வாங்கிக் கொடுக்க முடியுமா? குழந்தைகள் தேர்வு எழுதும் காலத்தில் அவர்களுக்கு உணவு கொடுப்பதில் இருந்து, தேவையான கல்விச் செலவுகளைச் செய்ய முடியுமா? இந்தக் கஷ்டத்தை எல்லாம் நினைத்துப் பார்த்துதான், ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளேன். 

மகளிர் உரிமை தொகை ரூ.2ஆயிரமாக உயர்த்தப்படும்

அதன்படி, இந்த பிப்ரவரி மாதம் மட்டுமில்லாமல் அடுத்த 2 மாசம் அதாவது மார்ச். ஏப்ரலுக்கான உரிமைத்தொகை தவணைகளையும் சேர்த்து 3 ஆயிரம் ரூபாயும், கூடுதலாகக் கோடைக்காலச் செலவுகளை கருத்தில் கொண்டு மேலும் 2 ஆயிரம் ரூபாய் சிறப்புத் தொகையும் சேர்த்து, இந்த பிப்ரவரி மாசம் 5 ஆயிரம் ரூபாயைச் சிறப்பு மகளிர் உரிமை தொகையாக ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்க உத்தரவிட்டிருக்கேன்.

அன்புச் சகோதரிகளே, உங்கள் ஆதரவோடு அடுத்து அமையப் போவதும் திராவிட மாடல் ஆட்சிதான்! அதனால், நீங்கள் மனம் குளிரும் சிறப்பான ஒரு அறிவிப்பையும் இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன். அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சிக் காலத்தில், உங்களின் உரிமைத்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். சொன்னால் சொன்னதைச் செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி இது! என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
‘முக்குலத்தோர் வாக்குகளுக்கு ஸ்கெட்ச்’ மு.க.ஸ்டாலின் தலைமையில் இணைப்பு விழா நடத்தும் ஒபிஎஸ்..!
’முக்குலத்தோர் வாக்குகளுக்கு ஸ்கெட்ச்’ மு.க.ஸ்டாலினின் மெகா பிளான்..!
TN Assembly Election: காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஓட்டுப்பெட்டிகள்! எலெக்ஷன் ரிசல்ட் என்னாச்சு?
TN Assembly Election: காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஓட்டுப்பெட்டிகள்! எலெக்ஷன் ரிசல்ட் என்னாச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG Semi Final: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
Rapido Food Delivery: வந்தாச்சு Ownly, இனி உணவு டெலிவரில எக்ஸ்ட்ரா சார்ஜே இல்ல.. ஸ்விகி, ஸொமாட்டோ விட குறைவு!
Rapido Food Delivery: வந்தாச்சு Ownly, இனி உணவு டெலிவரில எக்ஸ்ட்ரா சார்ஜே இல்ல.. ஸ்விகி, ஸொமாட்டோ விட குறைவு!
NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
மீண்டும் மீண்டுமா? சிவகங்கையில் 9 பேர் கும்பல் கொடூர தாக்குதல்- வெளியான பகீர் காட்சிகள்!
Embed widget