கும்மிடிப்பூண்டியில் ரூ. 2091 கோடியில் செம திட்டம்.! Mitsubishi ஏசி தொழிற்சாலை- கொட்டிக்கிடக்கும் வேலை
கும்மிடிப்பூண்டியில் 2,091 கோடி ரூபாய் முதலீட்டில், 2104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி செய்யும் மிட்சுபிஷி தொழிற்சாலையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் தொழிவளர்ச்சி- மிட்சுபிஷி
தமிழகத்தில் தொழில்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையில், புதிய புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. , இந்தியாவிலேயே தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகவும், தொழில் வளர்ச்சியில், முன்னணி மாநிலங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது.அந்த வகையில், பல ஆயிரம் கோடியில் முதலீட்டுக்கள் ஈர்க்கப்பட்டு பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் அமைக்க திட்டமிடப்பட்டது.
கும்மிடிப்பூண்டியில் மிட்சுபிஷி தொழிற்சாலை
ஜப்பான் நாட்டை சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன், ஆற்றல் மற்றும் மின்சார அமைப்புகள், தொழில்துறை ஆட்டோமேஷன், தகவல் மற்றும் தொடர்பு அமைப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சார மற்றும் மின்னணு உபகரணங்களை தயாரிப்பதில் இணையற்ற நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்த உலகளாவிய முன்னணி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) உற்பத்தி ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து அனைத்து பணிகளும் முடிவடைந்ததையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (6.02.2026) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
2091 கோடி முதலீடு- 2104 பேருக்கு வேலைவாய்ப்பு
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் 2091 கோடி ரூபாய் முதலீட்டில், 2104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் அமைத்துள்ள, அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) உற்பத்தி ஆலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
Mitsubishi தமிழ்நாட்டில் Electric நிறுவனம் அமைத்துள்ள இத்தொழிற்சாலை, இந்தியாவில் அதன் முதலாவது அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) உற்பத்தி ஆலை என்பது குறிப்பிடத்தக்கது. வெளிப்புற அலகுகள். உட்புற அலகுகள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) ஒரே இடத்தில் உற்பத்தி செய்யும் முதலாவது தொழிற்சாலையாகவும் இது இருக்கும். இத்திட்டத்தில் இந்நிறுவனம். இதுவரை 1633 கோடி ரூபாய் முதலீடு மேற்கொண்டுள்ளதுடன். 200-க்கும் மேற்பட்ட மகளிர் உட்பட 629 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.























