பசுமை தமிழகம் இயக்கம் சார்பில் மரக்கன்று நடும் திட்டத்தை வண்டலூரில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். 


செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இன்று பசுமை தமிழகம் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது. இந்த திட்டத்தினை முதலமைச்சர் முக ஸ்டாலின் மகிழம் மரத்தினை நட்டு துவக்கி வைத்தார். 


பசுமை தமிழகம் இயக்க தொடக்க விழாவை நேரலையில் காண:



தமிழகத்தில் 23.8% ஆக உள்ள காடுகளின் பரப்பை 10 ஆண்டில் 33% ஆக அதிகரிக்க பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களின் பங்களிப்போடு இயற்கை வளங்களை காக்க பசுமை தமிழகம் இயக்கத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2022-23 நிதியாண்டில் தமிழகத்தில் 2.8 கோடி மரங்களை நட இலக்கை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. 


இந்த திட்டத்தினை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், “ இயற்கையை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால் அவற்றை நம்மால் பாதுகாக்க முடியும். அதை காப்பற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும்.


அப்படிப்பட்ட உணர்வை அனைவரும் பெற்றிட வேண்டும். இதை சாத்தியமாக்கவே இந்த தமிழகம்’ தொடங்கப்பட்டு இருக்கிறது. தமிழகம் என்பதே பசுமையான மாநிலம்தான்.நம்முடைய இலக்கியங்களே இயற்கையை அதிகமாக பேசியிருக்கிறது.


காலநிலை அறியமுடியாத சூழல் இன்று ஏற்பட்டு இருக்கிறது. உலகின் சில பகுதிகளில் அனல் காற்று அதிகப்படியாக வீசி கொண்டு இருக்கிறது. தோல் எறிய கூடிய அளவுக்கு காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. இவை அனைத்தும் நாம் மறந்ததால் வந்த விணை என்பதை நாம் எச்சரிக்கையாக கொள்ள வேண்டும். 






அதற்கு நாம் காடுகளை பசுமையாக மீட்டு எடுக்க வேண்டும். நீர்நிலைகளை காக்க வேண்டும். இதற்காக அரசின் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஜப்பான் பண்ணாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியாக 920 கோடியே 50 லட்சம் கிடைத்துள்ளது. இதன்மூலம், சுற்றுச்சூழல் மேம்படுத்தல், பசுமையாக்குதல் நடத்த இருக்கிறது. தரம் குன்றிய நிலப்பரப்புகளை மறு சீராய்வு செய்து அவ்விடத்தில் புதிய வன பகுதியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. நபார்டு வங்கி 481 கோடியே 14 லட்சம் ரூபாயும் வனத்துறைக்கு வழங்க இருக்கிறது. அதற்கான ஒப்புதல்களையும் தந்துள்ளது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.