சென்னையில் போலீஸ் அனுமதியின்றி ஜிம் திறக்க வழிவகை செய்யும் வகையில் திருத்தம் செய்த மசோதாவை முதலமைச்சர் முக ஸ்டாலின் தாக்கல் செய்தார்.


இதுகுறித்து வெளியான அறிக்கையில், “உடற்தகுதியை பராமரிப்பதற்கு முக்கிய பயன்பாடாக, உடற்பயிற்சிக் கூடங்கள் அங்கீகரிக்கப்படக்கூடியதாகும். மக்களின் உடல்நலம் மற்றும் நலவாழ்வைக் கருத்தில் கொண்டு, உடற்பயிற்சிக் கூடங்களை எளிதாகத் தொடங்குவதற்கு வசதியாக, 2022 ஆம் ஆண்டு மே. திங்கள் 5 ஆம் நாளன்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற 39வது வர்த்தகர் தின மாநாட்டில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு உரிமம் பெறுவதற்கான தேவையானது நீக்கப்படுமென அறிவித்தார். மேற்கண்ட அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக, 1888 ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் சட்டத்தை (தமிழ்நாடு சட்டம் III/ 1888) தக்கவாறு திருத்தம் செய்வதென அரசானது முடிவு செய்துள்ளது.


2. இந்தச் சட்ட முன்வடிவானது மேற்சொள்ள முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.” என கூறப்பட்டு இருந்தது.