சென்னை மயிலாப்பூரில் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “ சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டம் அங்கீகாரம் திமுகதான் பெற்று தந்தோம். தேர்தல் என்பது திமுக அளித்த 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. நாளை மறுநாள் அண்ணா பிறந்தநாள் அன்று மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறேன்.


ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி கவலைப்படுவது திமுகதான். எப்போதும் மக்கள் பணி செய்யும் கட்சி திமுக தான். செப்டம்பர் 15ஆம் தேதி கொடுத்த வாக்குறுதிகள் 100க்கு 100% நிறைவேற்றப்பட்டிருக்கும். தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கு தொடர்ந்து வெற்றி பெற்று தருகின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறப் போகிறது” என்று பேசியுள்ளார்.