மேலும் அறிய

சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாமா? - தலைமைச் செயலாளர் மாற்றத்திற்கு முதல்வர் கண்டனம்

சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அ.தி.மு.க. - பா.ஜ.க. அடங்கிய “என்.டி.ஏ.” கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம் - முதல்வர் ஸ்டாலின்

தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ் அவர்களை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நியாயமான - சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க. ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது. அரசியல்சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பா.ஜ.க.விற்குத் தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல. நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது, ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல

பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பாஜக பிராக்சி ஆட்சி நடத்திய பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பா.ஜ.க.வின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கைகோத்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்குத் துணை போகத் துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல. ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம்; நாளை பதவியிலிருந்து போய் விடலாம். ஆனால் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல்சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து.

பாஜக மண்ணைக் கவ்வப் போவது உறுதி

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமர் அவர்களுக்கோ அல்லது அவர் வழிநடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனித்தன்மை புரியப் போவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் “தலைமைச் செயலாளர்” “டிஜிபி” ஆகியோரை மாற்ற பா.ஜ.க. தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன. எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அ.தி.மு.க. - பா.ஜ.க. அடங்கிய “என்.டி.ஏ.” கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு !
அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு !
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Iran War: சீனாவிடம் இருந்து செயற்கை கோளையே விலைக்கு வாங்கிய ஈரான் - வளைகுடா வர்த்தகத்தின் மீது டார்கெட்
USA Iran War: சீனாவிடம் இருந்து செயற்கை கோளையே விலைக்கு வாங்கிய ஈரான் - வளைகுடா வர்த்தகத்தின் மீது டார்கெட்
கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
TN Election 2026: விஜய், ஸ்டாலின், எடப்பாடி இன்று எங்கெல்லாம் பரப்புரை - ட்ராஃபிக் பிரச்னை, தவிர்க்க வேண்டிய ரூட்கள்
Delimitation: கூடுதல் மக்களவை தொகுதிகள், கொதிப்பில் தென் மாநிலங்கள் - விதி 66-ஐ கையிலெடுக்கும் மத்திய அரசு
Delimitation: கூடுதல் மக்களவை தொகுதிகள், கொதிப்பில் தென் மாநிலங்கள் - விதி 66-ஐ கையிலெடுக்கும் மத்திய அரசு
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
TVK Election Manifesto: தவெக தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுகிறார் விஜய்! எத்தனை மணிக்கு?
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்" முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு !
அம்பேத்கர் வழங்கிய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க, உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் - ப.சிதம்பரம் பேச்சு !
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Embed widget