Gopalapuram: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வீட்டை சூழ்ந்த வெள்ளநீர்: பாஜக நிர்வாகி போட்ட ட்வீட்.!
Former Chief Minister Karunanidhi: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் வீட்டை வெள்ளநீர் சூழ்ந்திருக்கும் புகைப்படத்தை, பாஜக நிர்வாகி பதிவிட்டுள்ளார்.
ஃபெஞ்சல் புயலானது, சில மணி நேரங்களில் கரையை கடக்கவுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கணிப்புக்குள் சிக்காத ஃபெஞ்சல்:
வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலானது, ஆரம்பத்திலிருந்தே அதன் போக்கை உறுதியாக கணிப்புதில் சிக்கல்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. தொடக்கத்தில் உருவாகும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் புயலாக உருவாகாது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் புயல் உருவாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் கரையை கடக்கும் என நேற்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் , இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் கரையை கடக்க ஆரம்பித்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.
அன்றாட வாழ்க்கை பாதிப்பு:
இந்நிலையில், நேற்றிருந்தே சென்னையில் அதீத காற்றானது வீசுகிறது. மேலும் அவ்வப்போது அதிகனமழையும் பெய்து வருகிறது. சிலமணி நேரங்களில் மழையின்றி அதிக காற்று மட்டும் வீசுவதையும் பார்க்க முடிகிறது.
சென்னையில் பொதுபோக்குவரத்து சில இடங்களில் தடைசெய்யபட்டிருக்கிறது. இதனால், மக்களின் அன்றாட வாழ்க்கையானது பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
கோபாலபுரத்தில் சூழ்ந்த வெள்ளநீர்:
மேலும், பள்ளமான பகுதிகளில் மழை தேங்கியிருக்கிறது. இந்த தருணத்தில் சென்னை மாநகராட்சியினர் , தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இல்லத்தையும் , வெள்ளநீர் சூழ்ந்துள்ள புகைப்படத்தை , பாஜகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகி கரு. நாகராஜன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சியினர் பலர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இல்லத்தின் முன்பே வெள்ளநீர் தேங்கியுள்ளது எனவும் , வடிகால் பணிகள் சிறப்பாக கையாண்டுள்ளதாக திமுகவினர் கூறிவரும் நிலையில் , இதுபோன்ற பதிவை பதிவிட்டு எதிர்க்கட்சியினர் விமர்சிப்பதையும் பார்க்க முடிகிறது.
Also Read: Fengal Cyclone Landfall: அப்பாடா.! ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க ஆரம்பித்தது.! அப்போ எப்போ முடியும்?
கரையில் இருந்து 85 கி. மீட்டருக்குள் புயல்.. சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகிறது. கோபாலபுரம் முதல்வர் இல்லத்தை வெள்ளம் சூழ்ந்தது. மரங்கள் சாய்ந்தது!!
— Karu.Nagarajan (மோடியின் குடும்பம்) (@KaruNagarajan) November 30, 2024
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது..@blsanthosh@annamalai_k @Murugan_MoS @HRajaBJP pic.twitter.com/Zu7yeH7VJ7