சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் சேது விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் முக்கிய ஸ்தலமாக ராமேஸ்வரம் கோயில் இருந்து வருகிறது. காசிக்கு அடுத்தப்படியாக புண்ணிய பூமியாக ராமேஸ்வரம் கருத்தப்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல்  வடஇந்தியாவில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ராமேஸ்வரம் செல்ல ரயில், பேருந்து பயணத்தை பக்தர்கள் நேர்ந்தெடுக்கிறார்கள். முக்கியமாக சென்னையில் இருந்து செல்லும் பக்தர்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். அங்கிருந்து ராமேஸ்வரம் செல்ல 700 கிலோ மீட்டர் வரை இருக்கும் என்பதால், பேருந்தைவிட ரயிலில் பயணம் செய்யவே அதிகம் விருப்பம் தெரிவிப்பார்கள். அவர்களுக்காக தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் காரணமாக எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் சேது விரைவு ரயில், வரும் 20ம் தேதியில் முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கத்திலும் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், சேது எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு. சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக, சேது எக்ஸ்பிரஸ் (22661/22662) 20.02.2026 முதல் 06.04.2026 வரை தாம்பரத்தில் புறப்பட்டு/நிறுத்தப்படும். பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.