சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நடந்த கொள்ளையில் போலீசாருக்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது. 


சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் மீனாவை கட்டிப்போட்டுவிட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. டிக்கெட் கவுண்டரில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுண்டரில் உள்ளவர்களை ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காலையில் கவுண்டருக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த விவகாரத்தில் கொள்ளையர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. எஸ்பி அதிவீரபாண்டியன் தலைமையில் இந்த தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 




ரயில் நிலையத்தில் நடந்த கொள்ளையில் போலீசாருக்கு தொடக்கமே பின்னடைவே ஏற்பட்டுள்ளது.  ரயில் நிலைய கொள்ளை என்றதும் சிசிடிவி புட்டேஜை தேடிச் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ரயில் நிலையத்தில் எங்குமே சிசிடிவி இல்லை என்பதும், அதைத் தெரிந்தே மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  மர்ம நபர்கள் எந்த வழியாக உள்ளே வந்தார்கள், எந்த வழியாக வெளியேறினார்கள் என்பது குறித்து  விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில் நிலையத்தின் வெளியே வேறு இடங்களிலும், சாலையிலும் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக பல்வேறு தரப்பினரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 




முன்னதாக 2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் பலரின் கண்முன் நடந்த அந்த படுகொலையை கண்டுபிடிப்பதில் பெரிய சிக்கலை ஏற்படுத்தியதே சிசிடிவி இல்லாத ஒன்றுதான். அதிக மக்கள் நடமாடும் ஒரு முக்கிய ரயில் நிலையத்தில் சிசிடிவி இல்லையா என பலரும் கேள்வி எழுப்பினர். அந்த சம்பவத்துக்கு பிறகு அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்வாதி கொலை நடந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இன்று நடந்த கொள்ளை வழக்குக்கும் சிசிடிவி இல்லாதது பின்னடைவு என்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண