சென்னை ஆழ்வார்திருநகர் அருகே உள்ள பள்ளியில் நேற்று 2ஆம் வகுப்பு மாணவர் விபத்தில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக வேன் ஓட்டுநர் பூங்காவணம் மற்றும் உதவியாளர் ஞானசக்தி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். 


இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இதில் வேன் ஓட்டுநர் பூங்காவணம் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருவதால் அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அந்தப் பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ் மற்றும் பள்ளி முதல்வர் தனலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்தப் பள்ளியின் வேன் ஓட்டுநர் பூங்காவனம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பள்ளி நிர்வாகம் இன்று மாலைக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 


மேலும் அந்தப் பள்ளியின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். அதன்படி பள்ளி வேனிலிருந்து இறங்கிய மாணவர் தீக்ஷித் நடந்து சென்றுள்ளதாக தெரிகிறது. அப்போது வேனை பார்க்கிங் செய்ய முற்பட்ட ஓட்டுநர் பூங்காவனம் வலது புறம் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அந்த வேன் சிறுவன் தீக்ஷித் மீது மோதியுள்ளது. இதன்பின்னர் அந்த மாணவரை ஆசிரியர்கள் மருத்துமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.




இந்த விபத்து குறித்து மாணவரின் தாய், “என்னுடைய மகன் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வேனில் சென்றார். அடுத்த 10 நிமிடங்களில் என் மகனுக்கு விபத்து நடைபெற்றதாக தொலைப்பேசி அழைப்பு வந்தது. அத்துடன் ஒரு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கூறியிருந்தனர். அங்குச் சென்ற பார்த்தபோது அவன் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறான் என்று தெரிவித்தனர். அதன்பின்பு என்னுடைய மகன் இறந்துவிட்டான் என்று தெரிவித்தனர். இன்று காலை அவன் வெள்ளை சட்டை அணிந்து சென்றான். அந்தச் சட்டை முழுவதும் இரத்தக்கறை படிந்துள்ளது. 7 வயது மகன் இப்படி இறந்துள்ளது எங்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய மகனிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இதுவரை யாரும் சரியாக தெரிவிக்கவில்லை'' என்றார்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண