Chennai Rains | இது சீன் 2 .. அடுத்த இரண்டு நாட்கள் கனமழை குறித்து வெதர்மேனின் அதிரடி அப்டேட்

தமிழகத்தில் அடுத்த 2 பெய்யும் மழை குறித்தான அப்டேட்டை தமிழ்நாடு வெதர் மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “  சினாரியோ 2 நடக்க வாய்ப்பு இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்திற்கு வர வாய்ப்பிருக்கிறது. ( The system will remain as low pressure and thus moving to NTN.)  மழை தொடங்க இன்னும் 40 மணி நேரம் இருக்கிறது ( நவம்பர் காலை). சென்னையை பொருத்த வரை இந்த மழை மெதுவாக அதிகரிக்கக் கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் இதனை நம்மால் உறுதி செய்ய முடியும். ஆகையால் நமக்கு இன்னும் ஒரு நாள் தேவை. நவம்பர் 7 மற்றும் நவம்பர் 11 தொடர்ந்து நவம்பர் 18 ஆம் தேதி பெய்யப் போகும் மழைக்காக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அரபிக் கடலை நோக்கி நகர்வதால் கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் மழையின் தாக்கம் குறைவாக இருக்கும். அடுத்த 2 நாட்களில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். தாழ்வு பகுதியானது தமிழக கடற்கரையோரம் நெருங்கும் சமயத்தில், மழை கடற்கரையோர பகுதிகளில் பெய்யும்.

 

 

 

 

 

 

மேலும் படிக்க: 

Continues below advertisement