வடகிழக்கு பருவமழை தொடர்பாக அவசர உதவிகளுக்கு காவல்துறை சார்பில் சென்னை ரிப்பன் மாளிகையில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏதேனும் புகார் வந்தால் 540 பேர் கொண்ட 18 பேரிடன் மாநில மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் மழை பாதிப்பு, மீட்பு பணிகள் தொடர்பான சேவைகளுக்கு 1913- என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும், இதுவரை ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 290 புகார்கள் வந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து பேசுகையில், “24 மணி நேரமும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீரன் ஐ.ஏ.எஸ். உள்ளிட்டோரின் பணிகள் சிறப்பானது. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் எதற்காக தண்ணீர் தேங்கியது என்பதை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தயார் செய்ய உள்ளோம்
சென்னை மாநகராட்சிக்கு இன்று காலை வரை மழை பாதிப்புகள் தொடர்பாக 408 புகார்கள் வந்துள்ளன. இதில் 107 புகார்கள் மீது உடனடியாக எடுக்கப்பட்டுள்ளன மீதமுள்ள 301 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இன்று காலை மட்டும் ஆறு புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.180 டிராக்டர் உடன் ஊழியர்கள் மழைநீரை அகற்ற தயாராக உள்ளனர்
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து நேற்றைய முன்தினம் இரவு முதல் தொடர் மழையானது பெய்து வருகிறது.
பரவலாக 200 வார்டுகளில் மழை பெய்துள்ளது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்புகழ் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் வழக்கமாக வெள்ள நீர் தேங்கும் இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கவில்லை
மேலும் இரண்டு மாதங்கள் இந்த நிலையை நாம் தொடர வேண்டும். துப்புரவு பணியாளர்கள் போர்கால அடிப்படையில் பணியாற்றியதால் வடிகால்கள் சீராக உள்ளது. பெரிய அளவிலான புகார்கள் இதுவரை இல்லை 401 புகார்கள் இதுவரை வந்துள்ளது 107 புகார்கள் சரிசெய்யப்பட்டுள்ளது. சாலைகள் சில இடங்களில் சிதிலமடைந்து அவற்றை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது
ஜனவரி 10 ம் தேதி வரை கூட மழை பெய்யலாம் - அடுத்த இரண்டரை மாதங்கள் தயார் நிலையில் இருக்க மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிடபட்டுள்ளது. மழை நீர் தேங்கி உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தபட்டு வருகிறது.
புகார்கள் மிக குறைவாகவே உள்ளது. மழை காலத்தில் 12 க்கும் மேற்பட்ட மாடுகளையும் பிடித்து உள்ளோம்.11000 க்கும் மேற்பட்ட சாலைகள் சீரமைக்கு ஒப்பந்தம் போடபட்டுள்ளது வானிலை ஆய்வு மையதின் அறிவுறுத்தலின் படி மழை பெய்யாத நாட்களில் இதற்கான பணிகள் நடைபெறும்
தாழ்வான பகுதிகளில் தனி கவனம் செலுத்தி வருகிறோம் தேவையான பம்பு செட்டுகளும் தயார் நிலையில் உள்ளது. 1 மணி நேரத்துக்கு 10 செ.மீ மழை பெய்தாலும் அவற்றை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.