Chennai Rain: சென்னையில் மழை எப்படி இருக்கப்போகுது தெரியுமா? வெதர்மேன் பிரதீப் ஜான் சூப்பர் அப்டேட்!
Chennai Rain: KTCC எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கான நேரம் வரும். அப்படி வரும் தரமான சம்பவமாக இருக்கும் என வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை.

தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அவ்வப்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 0.9 கிமீ உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு உள் கர்நாடகாவின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி வரை, தமிழகம் மற்றும் தெற்கு உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக் கூடும்.
கனமழை எச்சரிக்கை
திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: School Education Department: அக்டோபர் 15ம் தேதி வரை தான் டைம்.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் தெரிவித்துள்ளது.
இன்று சென்னையில் மழைக்கு வாய்ப்பா?
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெதர்மேன் பிரதீப் ஜான்
இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை குறித்து முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது KTCC எனப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கான நேரம் வரும். அப்படி வரும் தரமான சம்பவமாக இருக்கும். பருவமழை அதற்கே உரிய போக்கைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சீசனுக்கு ஒரு காலம் இருக்கிறது. அதேபோல் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் மழையின் இசையை அனுபவிக்கட்டும். தற்போது உள் மாவட்டங்கள், மேற்கு மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்























