சென்னை வியாசர்பாடியில் பகீர் !! வாடகை வீட்டில் விபச்சாரம் - வாலிபர் கைது, பெண் மீட்பு
வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய நபர் கைது. ஒரு பெண் மீட்பு

" வாடகைக்கு வீடு எடுத்து பெண்ணை வைத்து பாலியல் தொழில் "
சென்னை காவல் விபச்சார தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் வியாசர்பாடி 18 - வது கிழக்கு குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்த போது, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது உறுதி செய்யப்பட்டது.
அதன் பேரில் பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் வீட்டில் சோதனை செய்து, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது ஹபீஸ் ( வயது 34 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 1 பெண் மீட்கப்பட்டார்.
விசாரணையில் , கைது செய்யப்பட்ட முகமது ஹபீஸ் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட முகமது ஹபீஸ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
தங்க நகைகளை மீட்டு தனியார் அடகு நிறுவனத்தில் அடகு வைப்பதாக கூறி வங்கி கணக்கில் லட்ச கணக்கில் பணம் பெற்று மோசடி
சென்னை கொளத்தூர் சாஸ்திரி நகர் 2 - வது மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும் விஜயகுமார் ( வயது 43 ) என்பவர் தனியார் தங்க நகை அடகு வைக்கும் நிறுவனத்தில் ஏஜென்டாக வேலை செய்து வருகிறார். அடகு வைக்கும் நிறுவனத்தின் மேடவாக்கம் கிளை மேலாளர் மூலம் அறிமுகமான ராதாகிருஷ்ணன் , அசன் அலி உட்பட சிலர் ஏஜென்ட் விஜயகுமாரை அணுகி, தி.நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.40,06,000 ராதாகிருஷ்ணன் பெயரில் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.
அந்த நகையை மீட்டு மேடவாக்கம் தங்க நகை அடகு வைக்கும் நிறுவனத்தில் அடகு வைப்பதாக உறுதியளித்ததின் பேரில் , கடந்த 18.05.2026 அன்று விஜயகுமார் தி.நகர் தனியார் வங்கி கிளைக்கு சென்று ரூ.40,06,000 ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அவரது வங்கி கணக்கில் வரவு வைத்த நிலையில் , ராதா கிருஷ்ணன் சிறிது நேரத்தில் வங்கி கிளையிலிருந்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
உடனே விஜயகுமார் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சுமார் ரூ.24,06,000 முடக்கிய நிலையில், ரூ.16 லட்சத்தை ராதாகிருஷ்ணன் ஏற்கனவே மோசடி செய்யும் எண்ணத்துடன் திட்டமிட்டு கொடுத்து வைத்திருந்து காசோலை மூலம் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியில் உள்ள வேறு ஒரு நபரின் வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்ததாகவும், திட்டமிட்டு மோசடி செய்த ராதகிருஷ்ணன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு விஜயகுமார் மாம்பலம் காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மாம்பலம் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு தீவிர தேடுதலில் ஈடுபட்டு குற்ற வழக்கில் தொடர்புடைய ராதாகிருஷ்ணன் ( வயது 41 ) , அசன்அலி ( வயது 57 ) , தீபக் ( வயது 35 ) ஆகிய மூவரை கைது செய்தனர்.
மேற்படி வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புகார்தாரர் இழந்த பணத்தை மீட்க போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
Before You Go
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
ட்ரெண்டிங் செய்திகள்





















