சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்துக் கொண்டிருக்கும் நிலையில் விம்கோ நகர் பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “தொடர் மழை காரணமாக வெள்ளநீர் மட்டம் உயர்ந்து வருவதால், விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்துமிடத்திலிருந்து பயணிகள் உடனடியாக தங்கள் வாகனங்களை எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தண்ணீர் வடியும் வரை நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் மூடப்பட்டிருக்கும். இயல்பு நிலைக்கு பின்னர் மீண்டும் திறக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விம்கோ நகர் மெட்ரோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தி விட்டு பணியிடங்களுக்கும், வெளியிடங்களுக்கும் சென்ற பயணிகள் கலக்கமடைந்துள்ளனர்.