Weather Forecast Today: "தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது"
தமிழ்நாட்டில் பருவமழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிலிருந்து, தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் காலை நிலவரப்படி சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. ஆலந்தூர், சென்னை விமான நிலையம், ஆவடி ஆகிய இடங்களில் 3 சென்டிமீட்டர் மழை பதிவானது. தொடர்ந்து நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கனமழை பெய்தது. திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் இன்றைய மழை எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை மழைக்கு வாய்ப்புள்ளது.
கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் என்ன ?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்று கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் நிலவரம் என்ன ?
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் நிலை என்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் கன மழை பெய்தது. இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.