மேலும் அறிய

மக்களே அலர்ட் - இன்று முதல் ஜூன் 8 வரை தமிழ்நாட்டில் கொட்டப்போகும் கனமழை; எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 8ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

02-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

 

03-06-2026 மற்றும் 04-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

05-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

06-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

07-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

08-06-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்:

02-06-2026 முதல் 06-06-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

02-06-2026: வடக்கு உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.

03-06-2026 முதல் 06-06-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (02-06-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (03-06-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Diesel Supply : ’பெட்ரோல், டீசல் பெற திடீர் கட்டுப்பாடு?’ மீண்டும் கலக்கத்தில் வாகன ஓட்டிகள்..!
’பெட்ரோல், டீசல் பெற திடீர் கட்டுப்பாடு?’ கலக்கத்தில் வாகன ஓட்டிகள்..!
கடலூரை சுடுகாடாக்க விடமாட்டோம் - ஹைட்ரோகார்பன் திட்டம்; சீமான் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை
கடலூரை சுடுகாடாக்க விடமாட்டோம் - ஹைட்ரோகார்பன் திட்டம்; சீமான் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை
Admk Ex Mla Govindasamy : தவெகவில் இணைந்த ஒரே வாரத்தில் அரசியலில் இருந்து விலகிய மாஜி அதிமுக MLA.! இது தான் காரணமா.?
தவெகவில் இணைந்த ஒரே வாரத்தில் அரசியலில் இருந்து விலகிய மாஜி அதிமுக MLA.! இது தான் காரணமா.?
Admk MLA Case : விஜய் போட்ட பிளான்.! சுக்கு நூறாக உடைக்க களத்தில் இறங்கிய இபிஎஸ்- 4 எம்எல்ஏக்கள் வழக்கில் அதிமுக ட்விஸ்ட்
விஜய் போட்ட பிளான்.! சுக்கு நூறாக உடைக்க களத்தில் இறங்கிய இபிஎஸ்- 4 எம்எல்ஏக்கள் வழக்கில் அதிமுக ட்விஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Child Abuse: திருவள்ளூர் 3 வயது குழந்தை ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
திருவள்ளூர் 3 வயது குழந்தை ”கூட்டு பாலியல் வன்கொடுமை கிடையாது” - காவல்துறை விளக்கம்
'ஒபிஎஸ் மீது 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு’ அதிரடி காட்டிய சிபிசிஐடி..!
'ஒபிஎஸ் மீது 4 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு’ அதிரடி காட்டிய சிபிசிஐடி..!
Diesel Supply : ’பெட்ரோல், டீசல் பெற திடீர் கட்டுப்பாடு?’ மீண்டும் கலக்கத்தில் வாகன ஓட்டிகள்..!
’பெட்ரோல், டீசல் பெற திடீர் கட்டுப்பாடு?’ கலக்கத்தில் வாகன ஓட்டிகள்..!
NEET UG 2026: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி- மாற்று வழிகள் என்னென்ன?
NEET UG 2026: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி- மாற்று வழிகள் என்னென்ன?
’’எங்கே போச்சு சிங்கப்பெண் படை? 6 மாத Trial முடியும்வரை எத்தன உயிரை இழக்கணும்?’’ அதிமுக விளாசல்
’’எங்கே போச்சு சிங்கப்பெண் படை? 6 மாத Trial முடியும்வரை எத்தன உயிரை இழக்கணும்?’’ அதிமுக விளாசல்
வெண்டிலேட்டரில் சட்டம் ஒழுங்கு.! குழந்தைகள் பாதுகாப்பை கோட்டை விட்ட முதல்வர்- இறங்கி அடிக்கும் உதயநிதி
வெண்டிலேட்டரில் சட்டம் ஒழுங்கு.! குழந்தைகள் பாதுகாப்பை கோட்டை விட்ட முதல்வர்- இறங்கி அடிக்கும் உதயநிதி
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழப்பு.. தவெகவை சாடிய கனிமொழி!
3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழப்பு.. தவெகவை சாடிய கனிமொழி!
DMK Slams Rahul Gandhi : ‘காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்’ காலையிலேயே ராகுலை திட்டித் தீர்த்த திமுக..!
‘காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்’ ராகுலை திட்டித் தீர்த்த திமுக..!
Embed widget