சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் , கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருநெல்வேலி மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். வட மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மழை எப்படி?
நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகப்படுத்தி மூன்று குறைந்தபட்சம் இருபத்தி ஆறு தான் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அரியலூரில் 10 சென்டிமீட்டர் புதுச்சேரி சோழிங்கநல்லூர் மன்னார்குடி வீரகனூர் மற்றும் சென்னையில் தலா ஏழு செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வரும் 13ம் தேதி அந்தமான் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 14ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக ஆந்திரா ஒடிசா கடற்கரை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீச உள்ளதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு வரும் 12 ,13 தேதிகளில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள் சில: