சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
சென்னைக்கு ஆரஞ்சு அலெர்ட்
இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா, சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும், சென்னைக்கு இன்றும், நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெட் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்டைத் தொடர்ந்து, சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு கனமழை எச்சரிக்கை இருப்பதால் விடுமுறை அறிவிப்பதாக சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.
“வங்கக் கடலில் புயல்.?, நாளை தெரியும்“
சென்னையில் இன்று பேட்டியளித்த வான்லை ஆய்வு மையம் தென் மண்டல தலைவர் அமுதாவிடம், வங்கக் கடலில் புயல் உருவாகுமா என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து நாளை தெரியவரும் என கூறினார். சென்னையில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளதகாவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என கூறிய அவர், 23-ம் தேதி அநேக இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்தார். வரும் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.