சென்னையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் (Positivity Rate) அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.  அதாவது, சென்னையில் சராசரியாக 100 Chennai Covid-19 Positive Rate:  கொரோனா மாதிரிகளை சோதனை செய்தல் குறைந்தது 23 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. ஒட்டுமொத்த தமிழகத்தின் விகிதம் 14.86 விழுக்காடாக உள்ளது. தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் தேசிய விகிதம் 21.46 விழுக்காடாக உள்ளது. தற்போது, சென்னையில் நாளொன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான கோவிட் 19 குறித்த பரிசோதனையை சென்னை மாநகராட்சி மேற்கொள்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 30,005 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையம் தெரிவித்தது. 




 


சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,678 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.  கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஒரு நாள் உச்சமாகும். கொரோனா முதல் அலையின்போது, சென்னையின் அதிகபட்ச தினசரி பாதிப்பு 2,393 .என்ற அளவில்தான் இருந்தது. மேலும், அடுத்த சில நாட்களில் சென்னையின்  தினசரி பாதிப்பு எண்ணிக்கை 8,000-ஐ தாண்டும் என்று கணக்கிடப்படுகிறது.     




மேலும், கடந்த மே 2-ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக 6,000-க்கும் அதிகமான கோவிட் பாதிப்புகளை சென்னை பதிவு செய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னை தற்போது சென்னையில் தற்போது கோவிட்-19-க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 33,316-ஆக அதிகரித்துள்ளது.  


சென்னையின் விகிதம் ஏன் கவலையளிக்கிறது?   


கோவிட் மாதிரிகளை சோதனை செய்வதில் எத்தனை தொற்றுகள் உறுதி செய்யப்படுகின்றன என்பதை பொறுத்து இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது. 


தொற்று எண்ணிக்கை


------------------------------------            * 100 


ஒட்டுமொத்த கொரோனா சோதனைகள் 


இந்த விகிதத்தின் மூலம், சமூக அளவில் sars-cov-2 (கொரோனா வைரஸ்) பரவலின் தற்போதைய நிலை என்ன என்பதையும், நோய்த்தொற்று தாக்கத்திற்கு ஏற்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறதா ? என்பதையும் கணக்கிடமுடியும். எனவே, சென்னையில் உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் அதிகரித்திருப்பதன் மூலம் இரண்டு முக்கிய விஷயங்களை புரிந்துகொள்ளலாம். முதலாவதாக, சமூக அளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இரண்டாவதாக, கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அநேக சென்னைவாசிகள் இன்னும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.



 


உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதத்தை இரண்டு வழியில் குறைக்கலாம். முதலாவதாக, கோவிட் சிகிச்சை பெறுபவர்கள், புதிய பாதிப்புகள் ஆகியவற்றின் எண்ணிக்கையைக் குறைந்திடும் வகையில், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கைப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.  சென்னை மாவட்டத்தில் 700 துணை சுகாதார நிலையங்கள், 143 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 சமூக சுகாதார  மையங்கள், மூன்று வட்டத்தலைமை மருத்துவமனைகள் உள்ளன. இரண்டாவதாக, பாதிப்பு அதிகமிருக்கும் இடங்களில் கோவிட்-19 பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை தனிமைப்படுத்துவதன் மூல்ம் கொரொனா வைரஸ் பரவல் இணைப்புச் சங்கிலியை தகர்த்திட முடியும்.  தமிழகத்தில் கோவிட்  தொற்று பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. வரும் 20-ஆம் தேதி காலை 4 மணிவரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என மாநில அரசு அறிவித்தது.