மேலும் அறிய

"அம்மா, அப்பா மிஸ் யூ " எழுதி வைத்த கடிதம் - இளம்பெண்ணுக்கு கலைந்த கிரிக்கெட் கனவு

டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், 19 வயது கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கிரிக்கெட் பயிற்சியின் போது தடுமாற்றம்

சென்னையில் ஜி.எஸ்.டி கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ராஜஸ்தான் சேர்ந்த காஷ்மீர் குமார். இவரது மகள் 19 வயதுடைய ஏஞ்சல் காங்கவி, புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். எனவே கங்காவி புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள மீனாட்சி பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் கொண்ட ஏஞ்சல் காங்கவி, புதுச்சேரி துத்திப்பட்டில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து விளையாடி வந்திருக்கிறார். மேலும் டி20 போட்டியில் தேர்வாகி விளையாட கடுமையான பயிற்சி எடுத்து வந்த நிலையில், டி20 போட்டிக்கான வீராங்கனைகள் பட்டியலில் ஏஞ்சல் தேர்வாகவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்து மிகவும் சோகத்தில் மூழ்கியிருந்த அவர் பின்னர் நண்பர்களின் வழிகாட்டுதலின் படி இயல்பு நிலைக்கு திரும்பியதாக சொல்லப்படுகிறது. மேலும் சமீபகாலமாக கிரிக்கெட் விளையாட்டில் போதிய அளவு ஈடுபாடு இல்லாமல் தொடர்ந்து பயிற்சியின் போது தடுமாற்றம் அடைந்துள்ளார்.

தொலைபேசி அழைப்பு ஏற்கவில்லை

இந்நிலையில் கிரிக்கெட் பயிற்சியை முடித்து விட்டு இரவு வீடு திரும்பிய ஏஞ்சல் காங்கவி சோகத்துடன் இருந்துள்ளார். பின்னர் ஏஞ்சல் தனது பயிற்சியாளர் கதிர்வேலுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட நிலையில் அவர் வேலை காரணமாக செல்போனை எடுக்கவில்லை என தெரிகிறது.எனவே நீண்ட நேரம் கழித்து ஏஞ்சலுக்கு பயிற்சியாளர் கதிர்வேல் மீண்டும் போன் செய்த போது, அவர் நீண்ட நேரமாக அழைப்பை ஏற்காமல் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகமாடைந்த பயிற்சியாளர் சிறிது நேரத்திற்கு பின் ஏஞ்சல் வசிக்கும் வீட்டிற்கு நேரடியாக சென்று பார்த்த போது வீட்டில் இருந்த மின்விசிறியில் ஏஞ்சல் தூக்கில் தொங்கிய படி இருந்துள்ளார். உடனடியாக வீட்டின் உரிமையாளர் துரைராஜ் உதவியுடன் கதவை உடைத்து ஏஞ்சலை மீட்ட பயிற்சியாளர் அவரை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி ஏஞ்சல் காங்கவி பரிதாபமாக உயிரிழந்ததை தொடர்ந்து இது குறித்து வீட்டின் உரிமையாளரான துரைராஜ், கோரிமேடு தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

"அம்மா , அப்பா மிஸ் யூ "

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழக்குப்பதிவு செய்து ஏஞ்சல் காங்கவி வசித்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது அவர் தற்கொலை செய்வதற்கு முன் கைப்பட எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் என் வாழ்க்கை இவ்வளவு நாள் தான் என்பது கடவுள் எழுதி வைத்தது. என் மரணத்திற்கு நான் தான் காரணம் வேறு யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. "அம்மா , அப்பா மிஸ் யூ " என ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார்.

மேலும் அவரது செல்போனை போலீசார் சோதனையிட முயன்ற போது அது லாக் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி தற்கொலைக்கு முன் பயிற்சியாளருக்கு தொலைபேசியில் ஏஞ்சல் தொடர்பு கொண்டதால் டி 20 போட்டிக்கு தேர்வாகாத விரக்தி மற்றும் பயிற்சிகளில் சரியாக விளையாடாமல் தடுமாறுவதால் இம்முடிவை எடுத்துள்ளாரா ? பெற்றோர் தன்னுடன் இல்லையே என்ற வருத்தமா ? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
Tamilnadu Round Up: புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
Apprenticeship stipend : மாதம் ரூ.18,000 உதவித்தொகை.! Apprenticeship- களுக்கு அசத்தல் சான்ஸ்- தமிழக அரசு அழைப்பு
மாதம் ரூ.18,000 உதவித்தொகை.! Apprenticeship- களுக்கு அசத்தல் சான்ஸ்- தமிழக அரசு அழைப்பு
EWS இட ஒதுக்கீடு.. ஸ்டாலின் தடுத்ததாக சொன்ன ஆ.ராசா.. ஆனால் உண்மையே வேறு!
EWS இட ஒதுக்கீடு.. ஸ்டாலின் தடுத்ததாக சொன்ன ஆ.ராசா.. ஆனால் உண்மையே வேறு!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துக்கு மாற்றிய தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துக்கு மாற்றிய தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
Annamalai: வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
Tamilnadu Round Up: புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
TN DGP: உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
TN Weather Update: இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
Annamalai: விலகும் அண்ணாமலை.. எதிரியாக மாறிய பாஜக.. ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்!
Best Selling Car: SUV வேண்டாமே..! 33KM மைலேஜ் கொடுக்கும் பட்ஜெட் காருக்கு தான் செம்ம மவுஸ் - மே மாத டாப் 10 மாடல்
SUV வேண்டாமே..! 33KM மைலேஜ் கொடுக்கும் பட்ஜெட் காருக்கு தான் செம்ம மவுஸ் - மே மாத டாப் 10 மாடல்
Trichy East Election : திருச்சி கிழக்கில் போட்டியிடப்போவது யார்.? விஜய் முன் டாப் 3 லிஸ்ட்- யார் யார் தெரியுமா.?
திருச்சி கிழக்கில் போட்டியிடப்போவது யார்.? விஜய் முன் டாப் 3 லிஸ்ட்- யார் யார் தெரியுமா.?
Embed widget