" சாமானிய மக்களின் ஆட்டோ பயணம் "

ஆட்டோக்கள் உள்ளூர் பயணங்களின் முதுகெலும்பாக விளங்குகின்றன. மீட்டர் முறை மீறல் , அதிகக் கட்டணம் , சாகசச் செயல்கள் ஆகியவை சில இடங்களில் எதிர்மறையான ஆட்டோ கலாச்சாரத்தை ஏற்படுத்தினாலும் , சாமானிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு இதுவே விரைவான மற்றும் எளிய போக்குவரத்துச் சாதனமாகத் தொடர்கிறது.

Continues below advertisement

சென்​னை​யின் பிர​தான போக்​கு​வரத்து சேவை​களை பூர்த்தி செய்​யும் வகை​யில் ஆட்​டோக்​கள் இயங்கி வரு​கின்​றன. மோட்டார் வாக​னச் சட்​டத்​தின்​படி , ஒவ்வொரு வாக​ன​மும் தெளி​வாகக் காணக்​ கூடிய வகை​யில் பதிவு எண்ணை காட்​சிப்​படுத்த வேண்​டும்.

இது விபத்து அல்​லது குற்​றச் சம்பவங்களின்​ போது வாக​னத்தை அடையாளம் காண மிக​வும் முக்​கிய மானதாகும். ஆனால் நம்​பர் பிளேட் இல்லாமல் ஏராள​மான ஆட்​டோக்​கள் ஸ்டிக்கர் மட்​டும் ஒட்​டிக்​ கொண்டு மாநகரத்தில் உலா வரு​கின்​றன. இதனால் போக்​கு​வரத்து கண்​காணிப்பு கேம​ராக்​கள் எளி​தில் பதிவு செய்ய முடி​யாத சூழல் உருவாகி​யுள்​ளது.

Continues below advertisement

வாக​னப் பதிவெண் தொடர்​பாக போக்குவரத்துத் துறை காவல் அதி​காரி கூறும் ​போது ; 

கட்​டுப்​பாட்டை மீறி வேக​மாக செல்​லுதல் , அனு​ம​தி​யில்​லாத இடங்​களில் வாகனத்தை நிறுத்​துதல் , சாலை விதிகளை மீறு​தல் போன்ற செயல்​களில் ஈடு​படும் ஆட்​டோக்​கள் மீது அபராதம் விதிக்​கப்​படு​கிறது. ஆர்.​டி.ஓ மூல​மாக கொடுக்​கப்​பட்ட ஐஎன்டி , ஹோலோகி​ராம் , ஸ்டிக்​கர் கொண்ட நம்​பர் பிளேட்டை அகற்றி ​விட்டு சாதாரண ஸ்டிக்​கர் ஒட்​டு​வதால் உடனடி​யாக அந்த ஆட்​டோக்​களை சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் கண்​டறிவ​தில் சிரமம் ஏற்​படு​கிறது. ஆனால் , போதிய அளவில் ஆட்டோக்களுக்கு நம்​பர் பிளேட் தரப்படவில்லை என ஆட்டோ ஓட்​டுநர்​கள் தரப்​பில் குற்​றச்​ சாட்டு வைக்​கப்​படு​கிறது.

இது குறித்து ஆட்டோ தொழிற்​ சங்​கப் பிரிவு நிர்​வாகி கூறுகை​யில் ; 

சென்​னை​யில் ஓடும் 1.20 லட்​சம் ஆட்டோக்களில் 75% பழைய ஆட்​டோக்​கள்​தான். தற்​போது வரை பழைய ஆட்டோக்களுக்கு நம்​பர் பிளேட் வழங்கப்பட​வில்​லை.

யாரோ ஒரு சிலர் மட்​டுமே குற்​றச் சம்பங்களில் ஈடு​படு​கின்​றனர். எங்​களின் பிர​தான கோரிக்​கையே பழைய வாகனங்களுக்​கும் நம்​பர் பிளேட் வழங்கப்பட வேண்​டும். பர்​மிட் , ஆவணங்கள் உரிமம் பெறு​வது உள்ளிட்டவற்​றில் கால​தாமதத்தை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்டோ ஓட்​டுநர் தரப்பு புகார் குறித்து போக்​கு​வரத்து ஆணை​யரக உயர் அதி​காரி கூறும் ​போது 

வி​தி​முறை​களை மீறி இயக்​கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்​றோம். பழைய மற்​றும் புதிய ஆட்டோக்​கள் அனைத்​துக்​கும் விரை​வில் தமிழகம் முழு​வதும் பிரத்​யேக நம்​பர் பிளேட் வழங்க டெண்​டர் விட திட்டமிட்டுள்ளோம்.

மேலும் போக்​கு​வரத்து ஆணை​யரகம் தரப்பில் 22 வாகன சோதனைச் சாவடிகளில் ஹை-டெக் கேம​ராக்​கள் பொருத்​தும் பணி​களும் நடை​பெறுகின்றன எனக் கூறினார்.