சென்னையின் வளர்ச்சி திட்டங்கள்

வந்தோரை வாழவைக்கும் நம்ம சென்னையை சர்வதேச நகரங்களுக்கு இணையாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் படி மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலையம் விரிவாக்கம், தொழிற்துறை வளர்ச்சி என உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில் சர்வதேச தரத்தில் சென்னைக்கான 3வது மாஸ்டர் பிளான் திட்டத்தை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் அரசு உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

Continues below advertisement

சர்வதேச நகரங்களுக்கு இணையாக சென்னை

சென்னைக்கு 2 முழுமைத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதல் திட்டம் 1976-ம் ஆண்டும், 2-வது முழுமைத் திட்டம் 2006 முதல் 2026 வரையும் அமலில் உள்ளது. இதனையடுத்து கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சென்னையின்  3வது மாஸ்டர் பிளான் திட்டத்தை சர்வதேச தரத்தில் தயாரிக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது. 1,189 சதுர கி.மீ. பரப்பிலான சென்னை பெருநகர பகுதிக்கு 3-வது பெருந்திட்டம் தயாரிக்கும் பணியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்கடந்த 2022ம் ஆண்டு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை அதி நவீன வசதிகளோடு சர்வதேச தரத்தில் தயாரிக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது. 

முதலமைச்சர் விஜய் உத்தரவு

இதனையடுத்து சென்னை பெருநகருக்கான முழுமைத் திட்டத்தை (2026 - 2046) தயார் செய்யும் பணியில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஈடுபட்டு வருகிறது.  அந்த வகையில், சென்னை தலைமைசெயலகத்தில் துறை ரீதியான ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் சென்னையை சர்வதேச நாடுகள் போல மாற்ற வேண்டும் எனவும் அதற்கு இணையாக மாற்றங்களை செய்து திட்டத்தை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

இதனை தொடர்ந்து, ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆவணத்தை ஆய்வு செய்து, சர்வதேச வல்லுனர்களுடன் இணைந்து புதிய மாஸ்டர் பிளான் தயாரிக்க தவெக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப்பணிகள் முடிந்த விரைவில் இந்த மாஸ்டர் பிளான் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மாஸ்டர் பிளான் சிறப்பம்சம் என்ன.?

அந்த வகையில், சென்னை நகரம் வெளியே பரவாமல் உயரமாக வளர வேண்டும் என்பது முக்கிய அம்சமாக கூறப்படுகிறது. அந்த வகையில் மெட்ரோ காரிடார்கள், வணிக மையங்கள தொழில்துறை பகுதிகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் Floor Space Index அதிகரிக்கப்படும். நீர், மின்சாரம், சாக்கடை, சாலைகள், ஸ்மார்ட் சிட்டி வசதிகள் மேம்படுத்தப்படும்.