இரவு நேரத்தில் காட்டூர் வயல் நிலத்தில் மோட்டார் பம்புகளை திருட சென்ற மர்ம நபர்கள், வயல் நிலத்தில் பன்றி தொல்லைக்காக வைக்கப்பட்ட மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிர் இழந்தனர். வயல் நிலத்தில் மின்சாரம் பாய்ச்சிய விவசாயி கைது செய்த காயார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இரண்டு ஆண் சடலங்கள்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே காட்டூர் கிராமத்தில் சண்முகம் (வயது 55) என்பவர் இன்று காலை அவர்களின் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது பயிர் விவசாயம் செய்வதற்காக நாற்று விடபட்ட இடத்தில், அடையாளம் தெரியாத 30 வயசுக்கு மதிக்கத்தக்க இரண்டு ஆண் சடலங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து காயார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) தலைமையில் தாயார் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று , மின்சாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரத்தை துண்டிக்கப்பட்ட பின்னர் இரண்டு உடல்களை மீட்டனர்.
திருட வந்தவர்களா ?
வயல் நிலத்தில் மீட்கப்பட்ட இரண்டு சவடகங்கள் இருவரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் இரவு நேரத்தில் வயல் நிலங்களில் உள்ள மோட்டார் பம்புகளை திருடுவதற்கு வைத்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மோட்டார் பம்புகள் திருடுவதற்கு பயன்படுத்தும் கட்டிங் மெஷின்கள், இரும்பு ராடு, கட்டிங் பிலைடு போன்ற உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை அவ்விடத்தில் கைப்பற்றிய போலீசார் இரண்டு சடல்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இது குறித்து காயார் போலீசார் வயல் நிலத்தில் மோட்டார் பம்புகள் இருக்கும் இடத்திலிருந்து , சுமார் 500 அடி தூரத்திற்கு அப்பால் நாற்று விடப்பட்ட இடத்தில், மின்சாரம் பாய்ந்தது எப்படி என்ற கோணத்தில் போலீசார் காட்டூர் பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைதுப்செள்ளபட்டனர்.
பன்றிக்காக வைக்கப்பட்ட மின்சாரம்
அப்போது சண்முகம் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், முதற்கட்ட விசாரணையில் வயல் நிலத்தில் பயிர் செய்வதற்கு நாற்று விடப்பட்டதாகவும், விவசாய நிலம் சுற்றி காடு சூழ்ந்த பகுதி என்பதால் அவ்விடத்தில் பன்றிக்க தொல்லை அதிகமாக இருப்பதால் நெற்பயிர் செய்வதற்காக கழனியில் விடப்பட்ட நாற்றை பன்றிகள் சேதம் படுத்தி வந்துள்ளது.
அடையாளம் காணும் போலீஸ்
பன்றி தொல்லையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற நாற்றங்காலில் மின்உயர் மூலம் இரவில் மின்சாரம் பாய்ச்சி வந்ததாகவும், காலை சென்று பார்த்த போது மின்சார உயரில் அடையாளம் தெரியாத இருவர் பலியானதாகவும் பின்னர் மின் உயர்களை அப்புரபடுதிவிட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்ததை ஒப்பு கொண்டனர். தொடர்ந்து விவசாயிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பின்னர் காட்டூர் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், இரவில் மோட்டார் பாம்புகளை திருட வந்த மர்ம நபதால் யார் என்பதும் அவர்கள் பாக்கெட்டில் இருந்த செல்போன் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய மோட்டார் திருட வந்த இரண்டு வட மாநில இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கும் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.