Mamallapuram Surfing: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு சார்பில் 4-வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் நடத்தப்பட உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள இந்த ஆண்டுக்கான ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 20 ஆசிய நாடுகளிலிருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.  

போட்டிகள் நடைபெற உள்ள பிரிவுகள்

ஷார்ட்போர்டு – ஓப்பன் ஆண்கள், ஓப்பன் பெண்கள்,18 வயதுக்குட்பட்ட ஆண்கள் , 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் போட்டிகள் நடைபெற உள்ளன.

தங்கம், வெள்ளி, வெண்கலம் மற்றும் வெண்கலம் பதக்கங்களுக்கான போட்டிகளுடன், 2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதித் தேர்வாகவும் இந்த போட்டி சிறப்பு பெற்றுள்ளது.

தமிழ்நாடு  வளர்ந்து வரும் சர்ஃபிங் மையம்

இந்திய சர்ஃபிங் விளையாட்டில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. ஏனெனில் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 வீரர்களில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அலைச்சறுக்குப் போட்டியில் முக்கிய மையமாக தமிழ்நாடு உருவெடுக்க தொடங்கியுள்ளது. 

பங்கேற்கும் நாடுகள்:

- ஆப்கானிஸ்தான்  

- பங்களாதேஷ்  

- சீனா  

- இந்தியா  

- இன்டோனேசியா  

- ஜப்பான்  

- கொரியா  

- குவைத்து  

- லெபனான்  

- மலேசியா  

- மாலத்தீவுகள்  

- மியான்மர்  

- பிலிப்பைன்ஸ்  

- சவூதி அரேபியா  

- சிங்கப்பூர்  

- இலங்கை  

- தைவான் (Chinese Taipei)  

- தாய்லாந்து  

- ஐக்கிய அரபு அமீரகம்  

- உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த 150 அலைச்சறுக்கு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தியாவிலிருந்து கொள்பவர்கள் யார்?

ஸ்ரீகாந்த், கிஷோர் குமார், கமலி மூர்த்தி, சிருஷ்டி செல்வம், தயின் அருண், ஹரிஷ், பிரகலாத் ஸ்ரீராம், தமயந்தி ஸ்ரீராம் ஆகிய வீரர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரமேஷ் புதிகால் (கேரளா), சுகர் சாந்தி பனாரஸ் (கோவா), ஆத்யா சிங், சான்வி ஹெக்டே (கர்நாடகா) ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

சிறப்பம்சங்கள் என்ன ?

இதுகுறித்து இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பின் தலைவர் அருண் வாசு கூறுகையில், “மாமல்லபுரத்தில் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் நடத்துவது, இந்திய சர்ஃபிங் வரலாற்றில் மிக முக்கிய தருணம். மேலும் இந்த விளையாட்டு பொறுத்த வரை தமிழ்நாடு முன்னணியில் இருப்பதோடு, நம்மை சுற்றியுள்ள நாடுகளுடன் கூட்டு ஒத்துழைப்பின் (ASF–PASA) வாயிலாக ஒரு வலிமையான உலகளாவிய சமுதாயத்தை உருவாக்குகிறோம்"என தெரிவித்தார்.