அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.


நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றுக்கான அறிவிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. 


இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 12 ஆண்டுகள் கடந்தும் தகுதிப்பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.






முன்னதாக, கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவிற்கு தேர்வர்கள் http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக  விண்ணப்பிக்கலாம். தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


தேர்வுக் கட்டணம்


தேர்வர்களுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.250 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு தாள்களுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இரண்டு தேர்வுக்கும் தனித்தனியாகத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.  


வயது வரம்பு


தேர்வுக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை.


தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்னர், http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf என்ற இணைப்பைச் சொடுக்கி, தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.




மேலும் படிக்க: Sivakarthikeyan: ''3 வருஷமா என்ன பண்ணீங்க?'' சிவகார்த்திகேயனை கேள்விகளால் வறுத்தெடுத்த உயர்நீதிமன்றம்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண