ஆயிரம் விளக்கு மெட்ரோ இரயில் நிலையத்தில் பயணிகளின் நுழைவு மற்றும் வெளியேற்றத்தை எளிதாக்குவதற்காக தானியங்கி கட்டண நுழைவுவாயில் பயன்படுத்தும் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Continues below advertisement

சென்னை மெட்ரோவில் தினமும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதனால் பேருந்துகள், மின்சார ரயில்கள் போன்று மெட்ரோவிலும் கூட்ட நெரிசல் கூடிக்கொண்டே செல்கிறது. இதை தவிர்க்கும் பொருட்டு மெட்ரோ நிறுவனமும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது மெட்ரோ நிறுவனம் ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளது. முதற்கட்டமாக சென்னை ஆயிரம் விளக்கு மெட்ரோ நிலையத்தில் சோதனை முயற்சியை தொடங்கியுள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஆயிரம் விளக்கு மெட்ரோ இரயில் நிலையத்தில் பயணிகளின் நுழைவு மற்றும் வெளியேற்றத்தை எளிதாக்குவதற்காக தானியங்கி கட்டண நுழைவுவாயிலில் ஒரு புதிய முறையை சோதனை அடிப்படையில் செயல்படுத்தியுள்ளது.

 

ஆயிரம் விளக்கு மெட்ரோ இரயில் நிலையத்தில் உள்ள அனைத்து தானியங்கி கட்டண நுழைவுவாயில்களும் காலை08:00 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் மாலை 05:00 மணிமுதல் 08:00 மணி வரை “Normally Open” முறையில் செயல்படஉள்ளன. இந்த முயற்சி, நெரிசல் மிகு நேரங்களில் பயணத்தை எளிதாக்கவும், பயணிகள் நீண்ட வரிசையில் நிற்க்கும் நேரத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டது.

 

Normally Open முறையின் கீழ், தானியங்கி கட்டண நுழைவுவாயில்களின் கதவுகள் திறந்த நிலையில் இருக்கும், இதனால் பயணிகள் விரைவாகக் கடந்து செல்ல முடியும். எனினும், பயண கட்டண சரிபார்ப்பை உறுதி செய்யும் வகையில், பயணிகள் தங்கள் பயண அட்டை அல்லது QR பயணச்சீட்டை தானியங்கி கட்டண நுழைவுவாயில்களில் ஸ்கேன் செய்ய வேண்டும்.

  • பயணச்சீட்டு சரிபார்ப்பு வெற்றிகரமாக இருந்தால், பச்சைவிளக்கு தெரியும், மேலும் பயணிகள் தானியங்கி கட்டண நுழைவுவாயிலை கடந்து செல்லலாம்.
  • சிவப்பு விளக்கு தெரிந்தால் அல்லது எந்த பதிலும் கிடைக்காவிட்டால், பயணிகள் மீண்டும் முயற்சிக்கவேண்டும் அல்லது பயணச்சீட்டு கவுண்டர்களில் பயணச்சீட்டை சரிபார்க்க வேண்டியது அவசியம்
  • சரியான பயணச்சீட்டு இல்லாமல் நுழைய முயற்சித்தால், தானியங்கி கட்டண நுழைவுவாயில்களின் கணினி அமைப்பு தானாகவே கதவுகளை மூடிவிடும், அதனால் அங்கீகரிக்கப்படாத நுழைவு தடுக்கப்படும்.

 

உதவி அல்லது கருத்துகளை தெரிவிக்க, மெட்ரோ இரயில் நிலையத்தில்   உள்ள பணியாளர்களை அணுகலாம், அல்லது http://chennaimetrorail.org என்ற இணையதளத்தில் உங்கள்கருத்துகளை தெரிவிக்கலாம்.” எனத் தெரிவித்துள்ளது.