தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்:

பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மே 31, ஜூன் 2 தேதிகளில் 19 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காலை 11.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

 

பயணிகள் வசதிக்காக மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர் இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

ரத்தாகும் மற்ற ரயில்களின் விவரங்கள்:

அதேபோல, சென்னை எழும்பூர் - விழுப்புரம் பகுதிக்கு உட்பட்ட காட்டாங்குளத்தூர் பகுதியில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 11:45 மணி முதல் 15:15 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே பத்து மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அவ்வப்போது இந்த வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த சமயங்களில் கூடுதலாக சிறப்பு ரயில்களும், இயக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையே காட்டாங்குளத்தூர் பகுதியில், பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

இதையும் படிக்க: விழுப்புரம் - ராமேஸ்வரம் சிறப்பு அதிவிரைவு ரயில்; எந்தெந்த இடங்களில் நிற்கும் தெரியுமா ?