மேலும் அறிய

CM Vijay Deepfake Video: முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை

தமிழக முதலமைச்சர் விஜய் பேசுவது போன்று ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட போலி வீடியோ சமூக வலைதளங்களில் பரவும் நிலையில், சிபிசிஐடி சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிந்து, மக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் விஜய் படத்துடன் டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிவரும் நிலையில்,  அதை உருவாக்கியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சிபிசிஐடி போலீசார், இது போன்ற மோசடிகளில் இருந்து பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிபிசிஐடி போலீசாரின் அறிக்கை

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக சிபிசிஐடி போலீசார், பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக முதல்வர் விஜய் பேசுவது போன்று ஏஐ வாயிலாக உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று பரவி வருவதாகவும், பண உதவி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளும்படி வாட்ஸ்அப் எண் ஒன்றை கொடுத்து, அதில் தொடர்புகொள்ளுமாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

சைபர் குற்றங்கள் தொடர்பான சிபிசிஐடி போலீசாரின் கண்ணிப்பின்போது, இந்தி மொழியில் உள்ள அந்த வீடியோ  சைபர் குற்றப்பிரிவு போலீசாரின் கவனத்திற்கு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1-ம் தேதி அது குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த வீடியோவை உருவாக்கிய போலி ஐடி குறித்த தகவல்களை அளிக்கும்படி மெட்டா நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அந்த வீடியோவை அகற்றும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விஜய் தோற்றத்தில் உருவாக்கப்பட்ட இதுபோன்ற பல ஏஐ வீடியோக்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருவதாகவும், இந்த வீடியோக்கள் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த வீடியோவை உருவாக்கிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து, போலி வீடியோக்களை அகற்றவும் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்து  வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தொடர்ந்து, இது போன்ற மோசடி வீடியோக்களில் குறிப்பிடப்படும் தொலைபேசி எண்களில் பொதுமக்கள்  தொடர்புகொள்ள வேண்டாம் என்றும், அதில் குறிப்பிடப்படும் வாட்ஸ்அப் குழுக்களில் இணையவோ, அவற்றின் வாயிலாக அறிவுறுத்தப்படும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டாம் எனவும் சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏஐ தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்கப்படும் டீப் ஃபேக் வீடியோக்களில், முதலமைச்சர் விஜய் போன்று ஆள்மாறாட்டம் செய்து வெளியிடப்படும் போலியான பதிவுகள் குறித்து, பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதுடன், இணையதள மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவம் சிபிசிஐடி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், இத்தகவலை, பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சுற்றத்தாரிடம் எடுத்துரைத்து, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay Deepfake Video: முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை
முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை
கிருஷ்ணரின் பரிபூரண அருளைப் பெற என்ன செய்யுணும்... வரும் 4ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா
கிருஷ்ணரின் பரிபூரண அருளைப் பெற என்ன செய்யுணும்... வரும் 4ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா
கல்வித் துறையில் புரட்சி படைக்கப் போகும் அடுத்த தலைமுறை ஏ.ஐ... என்ன விஷயம் தெரியுங்களா?
கல்வித் துறையில் புரட்சி படைக்கப் போகும் அடுத்த தலைமுறை ஏ.ஐ... என்ன விஷயம் தெரியுங்களா?
ஆம்பூர், ஜோலார்பேட்டை மக்களுக்கு குட் நியூஸ்! எம்.பி எல்.கே.சுதீஷ் கொடுத்த அதிரடி வாக்குறுதி!
ஆம்பூர், ஜோலார்பேட்டை மக்களுக்கு குட் நியூஸ்! எம்.பி எல்.கே.சுதீஷ் கொடுத்த அதிரடி வாக்குறுதி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Deepfake Video: முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை
முதலமைச்சர் விஜய்யின் படம், குரலுடன் டீப்ஃபேக் வீடியோ; மக்களுக்கு சிபிசிஐடி போலீசார் எச்சரிக்கை
Fishermen Financial Assistance : மீனவர்களுக்கு உதவித்தொகை அதிரடியாக உயர்வு.! இனி தினமும் ரூ.600 - வெளியான முக்கிய அறிவிப்பு
மீனவர்களுக்கு உதவித்தொகை அதிரடியாக உயர்வு.! இனி தினமும் ரூ.600 - வெளியான முக்கிய அறிவிப்பு
DMK: சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
சென்னையை 10 ஆக உடைத்து போட்ட திமுக - புதிய மாவட்ட செயலாளர்கள் யார்? உத்தேச பட்டியல் இதோ..!
கம்மி பட்ஜெட், பெரிய லாபம்: ரூ.1 லட்சம் போதும்- ஈஸியா மாருதி ஈகோ கார் வாங்கலாம்- எவ்ளோ EMI?
கம்மி பட்ஜெட், பெரிய லாபம்: ரூ.1 லட்சம் போதும்- ஈஸியா மாருதி ஈகோ கார் வாங்கலாம்- எவ்ளோ EMI?
ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
ஆடம்பர EV சகாப்தம் ஆரம்பம்; ரேஞ்ச் ரோவர் எலக்ட்ரிக் கார் அறிமுகம்- இந்தியாவில் புக்கிங் தொடக்கம்!
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
குடும்ப ட்ரிப்புக்கு பெஸ்ட் சாய்ஸ்! ரூ.20 லட்சத்திற்குள் 7 சீட்டர் கார்கள்; டாப் 5 பட்டியல் இதுதான்!
Maruti e Vitara on EMI: 400 கிமீ ரேஞ்சுடன் மாருதியின் முதல் முழு மின்சார SUV; இ விதாராவ லோன்ல வாங்குனா EMI எவ்ளோ வரும்.?
400 கிமீ ரேஞ்சுடன் மாருதியின் முதல் முழு மின்சார SUV; இ விதாராவ லோன்ல வாங்குனா EMI எவ்ளோ வரும்.?
Mitsubishi Pajero India Launch: மாஸாக ரீ என்ட்ரி கொடுத்த மிட்சுபிஷி பஜேரோ.! SUV-ன் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம்.! ஏன் தெரியுமா.?
மாஸாக ரீ என்ட்ரி கொடுத்த மிட்சுபிஷி பஜேரோ.! SUV-ன் இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றம்.! ஏன் தெரியுமா.?
Embed widget