காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி கருத்தரங்கு கூட்டம் புதுக்கோட்டையில் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது. காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையம் (ICAR – IISR) இணைந்து நடத்தும் சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி குறித்த மாபெரும் கருத்தரங்கு வரும் ஜூலை 16-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக பங்கேற்க உள்ளனர். இது தொடர்பாக நேற்று (ஜூலை 14) சென்னை பிரஸ் கிளப்பில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இக்கருத்தரங்கில் சமவெளியில் மிளகு, ஜாதிக்காய், லவங்கம், காப்பி, சர்வ சுகந்தி, இஞ்சி போன்ற பயிர்களை வெற்றிகரமாக பயிர் செய்துள்ள விவசாயிகளும், இந்திய நறுமணப்பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தை (ICAR – IISR) சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர். கண்டியண்ணன் மற்றும் டாக்டர். முகமது பைசல் பீரன் ஆகியோர் கலந்து கொண்டு சமவெளியில் நறுமணப்பயிர்கள் சாகுபடி உத்திகள், அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள், மதிப்புக்கூட்டுதல் போன்றவற்றை விளக்க உள்ளார்கள்.
இதனால் மரப்பயிர்களின் அறுவடை வரை வருமானத்திற்கு காத்திருக்காமல் ஊடுபயிர்கள் மூலமே தொடர் வருமானம் பெறுகிறார்கள். பெரும்பாலான நறுமணப் பயிர்கள் மரங்களுக்கு கீழே குளிர்ச்சியான சூழ்நிலையில் வளரக்கூடியதாக உள்ளதால் சரியான சூழ்நிலையை உருவாக்கி மர விவசாயிகள் அதிக வருமானம் பெற இயலும்.
மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விவசாயிகள் வள்ளுவன் மற்றும் திருமலை ஆகியோர் பங்கேற்றனர். கடலூரைச் சேர்ந்த விவசாயி திருமலை அவரது தோட்டத்தில் கடந்த 15 வருடங்களாக மிளகு சாகுபடி செய்கிறார். டிம்பர் மரங்கள், தென்னை, கிளைரிசிடியா, பனை மற்றும் முந்திரி மரங்களிலும் மிளகு வளர்த்துள்ளார். பொள்ளாச்சியைச் சேர்ந்த வள்ளுவன் தென்னை மரங்களுக்கிடையே ஜாதிக்காய் நடவுசெய்து வெற்றிகரமாக வருமானம் ஈட்டிவருகிறார். இவர் 6 வருடங்களுக்கு முன் ஈஷா நடத்திய மிளகு சாகுபடி பயிற்சியில் கலந்துகொண்டபின் மிளகு நட்டு தற்போது வெற்றிகரமாக மிளகு அறுவடை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாபெரும் விவசாய கருத்தரங்கை மாண்புமிகு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி. மெர்சி ரம்யா அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்க உள்ளார்.