தண்ணீர் மட்டும் குடித்து 'சஷ்டி விரதம்' இருக்கலாமா? 

Continues below advertisement



அன்பார்ந்த வாசகர்களே விரதம் என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்... உணவு உண்ணாமல் விரதம் இருப்பது, மௌனமாக விரதம் இருப்பது, ஒருவேளை மட்டும் உணவு உண்பது காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தண்ணீர் கூட அருந்தாமல் கடுமையான உணவு கட்டுப்பாடுடன் விரதம் இருப்பது, பிற சத்தங்களை வெளியில் கேட்காமல் விரதம் இருப்பது இப்படியாக விரதங்கள் பல வகைகளில் உள்ளது இவை அனைத்துமே வெளி உலக தொடர்பை துண்டிப்பது... இப்படியாக தியாகம் செய்து இறைவனுக்காக நம்மை வருத்தி விரதம் இருந்தால் இறைவன் நாம் கேட்ட வரங்களை கொடுப்பார் என்பது ஐதீகம்... ஆனால் உண்மையில் இறைவன் கேட்பது என்ன அனைத்து புராண கதைகளில் இருந்தும் நமக்குத் தெரிய வருவது ஒன்றே ஒன்றுதான் அவை பக்தி... பக்தி ஒன்று மட்டும் தான் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களோடு நம்மை இணைக்கும்... இறைவனோடு நாம் மனதார பக்தி செலுத்தி சேர்ந்தால்.... இறைவன் நம்மோடு சேர்வார் என்பது தான் அதன் தார்பரியம்.... 



சஷ்டி விரதம் இருப்பவர்கள் தற்பொழுது கடுமையாக தண்ணீர் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கிறார்கள்... அதே போல மிளகு விரதம் என்று ஒன்று வந்திருக்கிறது... அவையும் ஒரு நாளைக்கு ஒரு மிளகு... இரண்டாவது நாளைக்கு இரண்டாவது மிளகு... என்று ஆறு நாட்கள் எதையுமே சாப்பிடாமல் மிளகு மட்டும் சாப்பிட்டு... உயிர் வாழ்வது என்று மக்கள் கடுமையான முறையில் சிலர் விரதத்தை கடைபிடிக்கிறார்கள்.... ஆனால் என்னுடைய பார்வையில் உங்களுடைய உடலை அவ்வாறு வருத்திக்கொண்டு... எந்த கடவுளும் பக்தி செலுத்த சொல்ல மாட்டார்... மாறாக ஒருவேளை உணவை தியாகம் செய் அல்லது இருவேளை உணவை தியாகம் செய் என்று நீங்களாக அவருக்கு செய்து பக்தி செலுத்தினால்... அது உங்களுக்கு திருப்தியானதாக... இறைவன் மீது மட்டுமே கவனம் செலுத்தும் வகையில் இருக்கும் என்று எடுத்துக் கொண்டால் செய்யலாம்...


 அவ்வாறு இஸ்லாமியர்கள் கூட சூரியன் உதிக்கும் முன்பாக விரதத்தை தொடங்கி விடுவார்கள் சூரியன் மறைந்த பின்பு தான் விரதத்தை முடிப்பார்கள்... கிட்டத்தட்ட இது ஒரு கடுமையான விரத முறை... இதுபோல மனிதனால் இருக்க முடியும் ஆனால் தெய்வம் நான் உங்களுக்கு ஒன்று கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் எனக்கு இவையெல்லாம் தர வேண்டும் என்று கேட்க மாட்டார்... மாறாக உண்மையான அன்பை என் மீது நீ செலுத்தினால் உன்னை தீங்கிலிருந்து காப்பாற்றி நல்வழிப்படுத்துவேன் என்று தெய்வங்கள் உறுதியாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை...


 கந்த சஷ்டி விரதத்தை பொருத்தவரை மனதார தெய்வத்துக்கு நீங்கள் இருந்தால் தெய்வம் உங்களுக்கு தேவையான அனைத்து நல்லவைகளையும் செய்யும்.. என்பதில் மாற்றுக் கருத்து இல்லை... சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று சொல்லுவார்கள் அதாவது சஷ்டியில் விரதம் இருப்பவர்களுக்கு நல்ல புத்தக பேரு கிடைக்கும் என்றும் பெண்களாக இருக்கும் பட்சத்தில் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல கணவன் அமைவார் என்பதும் காலம் காலமாக நாம் கடைபிடித்து வரக்கூடிய ஒரு அமைப்பு... இந்த அமைப்பின்படி ஆறு நாட்கள் நீங்கள் விரதம் இருக்கலாம் உங்களுடைய உடல் நலத்திற்கு ஏற்றார் போல் விரத முறைகளை கடைபிடியுங்கள் நிச்சயமாக முருகப்பெருமானின் அருளைப் பெறுங்கள்....