மேலும் அறிய

Leema Rose Martin: அன்று பர்மா அகதி.. இன்று பணக்கார MLA .. வியக்க வைக்கும் லீமா ரோஸின் பின்னணி!

தனக்கொரு ஒரு அங்கீகாரம் கிடைக்க, மக்களுக்கு சேவை செய்ய, லால்குடி தொகுதியை மாற்றிக் காட்ட வேண்டும் என்ற நோக்கில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என லீமா ரோஸின் அண்ணன் மகள் மெர்லீனா தெரிவித்துள்ளார்.

லீமா ரோஸ் பணக்கார வேட்பாளர் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்ட நிலையில் விவசாயி மகளான அவருக்கு மக்களின் கஷ்டங்கள் நன்கு புரியும் என மெர்லீனா அன் தெரிவித்துள்ளார். 

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் என்ற பெருமையை லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ., லீமா ரோஸ் பெற்றார். அவரைப் பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.  இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய லீமா ரோஸின் அண்ணன் மகளான மெர்லீனா பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

அதாவது, “என்னுடைய அத்தை லீமா ரோஸ் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். ஆனால் அவருக்கு கொடுத்த தொகுதி லால்குடி. நாங்கள் தேர்தல் நேரத்தில் சென்னையில் இருந்து லால்குடி பயணப்பட்டுக் கொண்டே இருந்தோம். அதேசமயம் லீமா ரோஸ்க்கு லால்குடியில் வீடு இருப்பதால் அங்கேயே தங்கி தேர்தல் பரப்புரை கொண்டோம். 

இதையும் படிங்க: திருச்செந்தூரில் நிம்மதியான தரிசனம்.. அமைச்சர் ஆய்வுக்குப் பின் நடந்த மாற்றம்.. வீடியோ வெளியீடு!

எனக்கு லீமா ரோஸ் ரோல்மாடலாக திகழ்பவர். அங்கு தான் என்னுடைய அரசியல் பயணம் தொடங்கியது. வீடியோவைப் பார்க்கும்போது நான் லீமா ரோஸ் பொண்ணு என சொல்வார்கள். அவர் எனக்கு அத்தை மாதிரி. ஆதவ் அர்ஜூனாவின் மனைவி தான் தான் லீமா ரோஸின் மகளாவார். தொகுதியில் தேர்தல் பரப்புரைக்கு செல்லும்போது லீமா ரோஸை என்னுடைய அக்காவா என அங்குள்ள மக்கள் கேட்பார்கள். நான் ஓட்டுக் கேட்க போனதை பலவாறாக விமர்சித்தார்கள். 

குறிப்பாக ஒரு மூதாட்டியுடன் நான் பேசும்போது என் புடவை விலகியதைக் கூட விமர்சித்தார்கள். சாதாரணமாக புடவை கட்டினால் இடுப்பு தெரியத்தான் செய்யும். அதை பெரிதாக காட்ட வேண்டுமென்ற அவசியம் எனக்கு இல்லை. பார்ப்பவர்களை தான் சொல்ல வேண்டும். அதன்பிறகு எனக்கு புடவை கட்டவே பயமாக இருந்தது. இருந்தாலும் தமிழ்நாட்டு பெண்கள் புடவை அணிவது ஒரு கௌரவம். அதனால் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், நான் புடவை கட்டுவதை நிறுத்தக்கூடாது என முடிவெடுத்தேன். 

அதேபோல் லீமா ரோஸ் பணக்கார வேட்பாளர் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. லால்குடி தொகுதி பணம் புழங்கக்கூடிய இடம் என்றெல்லாம் சொன்னார்கள். அதுமட்டுமல்லாமல் லீமா ரோஸ் பணக்கார வேட்பாளர், அவர் ஓட்டு கேட்டெல்லாம் வரமாட்டார்கள் என கூறினார்கள். 

என்னுடைய அத்தை வயதுக்கோ, வசதிக்கோ விமர்சனம் வைப்பது போல ஒரு ஏசி ரூமுக்குள் இருந்து எல்லாம் செய்திருக்கலாம். ஆனால் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் லீமா ரோஸ். அவர் ஒரே இரவில் பணக்காரராக மாறவில்லை. எங்கள் குடும்பம் பர்மாவில் இருந்து அகதியாக வந்தவர்கள். இங்க பிழைக்க வந்த நிலையில் விவசாய குடும்பத்தில் இருந்ததால் லீமா ரோஸ்க்கு கஷ்டமெல்லாம் தெரியும். 

அவர் பணம் சம்பாதித்து இருந்திருக்கலாம். அதை மக்களுக்கு செய்ய வேண்டும் என நினைப்பதே பெரிய விஷயம். எங்க அத்தை இருக்கும் நிலைமைக்கு அவர் எம்.எல்.ஏ, தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது தேவையில்லை. ஒரு அங்கீகாரம் கிடைக்க, மக்களுக்கு சேவை செய்ய, லால்குடி தொகுதியை மாற்றிக் காட்ட வேண்டும் என்ற நோக்கில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நான் வாக்கு கேட்டதால் லீமா ரோஸ் ஜெயித்தார் என்பதில் உண்மையில்லை. நானும் தேர்தலில் போட்டியிடுவேன்  என சொல்வதும் தவறானது. களத்தில் இறங்கி மக்களை தேடித்தேடி சந்தித்தப்போது தான் அவர்களின் கஷ்டம் எங்களுக்கு புரிந்தது” என மெர்லீனா அன் தெரிவித்துள்ளார்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

RAIN Tamil Nadu : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு மழை.! டெல்டா வெதர்மேன் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு மழை.! டெல்டா வெதர்மேன் அலர்ட்
Sivaganga: குப்பை அள்ளிய மாணவர்கள்.. ஆசிரியர்களை செய்ய சொன்ன மாவட்ட கல்வி அதிகாரி.. சரமாரியாக திட்டு!
Sivaganga: குப்பை அள்ளிய மாணவர்கள்.. ஆசிரியர்களை செய்ய சொன்ன மாவட்ட கல்வி அதிகாரி.. சரமாரியாக திட்டு!
ஆயிரம் வேரைக் கொன்றவன் பாதி! ஆரோக்கியம் காக்கும் வைத்திய நீதி: மருவிய பழமொழியின் உண்மை இதோ!!!
ஆயிரம் வேரைக் கொன்றவன் பாதி! ஆரோக்கியம் காக்கும் வைத்திய நீதி: மருவிய பழமொழியின் உண்மை இதோ!!!
MK Stalin: (அ)திமுகவின் சேம் கான்செப்ட்..! ரூ.44,084 கோடி Vs ரூ.4.96 லட்சம் கோடி..! ஸ்டாலின் அறிக்கை வைரல்
(அ)திமுகவின் சேம் கான்செப்ட்..! ரூ.44,084 கோடி Vs ரூ.4.96 லட்சம் கோடி..! ஸ்டாலின் அறிக்கை வைரல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக
Yuvaraja resigns from TMC | ”தமாகா-வில் இருந்து விலகுகிறேன்” யுவராஜா அதிரடி அறிவிப்பு! தவெகவில் இணைகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: (அ)திமுகவின் சேம் கான்செப்ட்..! ரூ.44,084 கோடி Vs ரூ.4.96 லட்சம் கோடி..! ஸ்டாலின் அறிக்கை வைரல்
(அ)திமுகவின் சேம் கான்செப்ட்..! ரூ.44,084 கோடி Vs ரூ.4.96 லட்சம் கோடி..! ஸ்டாலின் அறிக்கை வைரல்
TN Finance: உதவித்தொகை திட்டங்களால் கடனாளியாகும் தமிழ்நாடு? தினமும் ரூ.184 கோடி வட்டி - ஷாக் நிதிநிலை
உதவித்தொகை திட்டங்களால் கடனாளியாகும் தமிழ்நாடு? தினமும் ரூ.184 கோடி வட்டி - ஷாக் நிதிநிலை
TN Weather Update: இன்று 7 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களிலும் கனமழை.. சென்னை? தமிழக வானிலை
இன்று 7 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களிலும் கனமழை.. சென்னை? தமிழக வானிலை
Aadhav Arjuna: ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்.. நோட்டீஸ் அனுப்பி செக் வைத்த ஆதவ் அர்ஜூனா.. நடந்தது என்ன?
Aadhav Arjuna: ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்.. நோட்டீஸ் அனுப்பி செக் வைத்த ஆதவ் அர்ஜூனா.. நடந்தது என்ன?
Upcoming Flex Fuel Cars: பட்ஜெட்டை தாண்டி, SUV-க்களில் ஃப்ளெக்ஸ் ஃபியூல்..! எந்தெந்த டாப் மாடல் கார்கள் தெரியுமா?
பட்ஜெட்டை தாண்டி, SUV-க்களில் ஃப்ளெக்ஸ் ஃபியூல்..! எந்தெந்த டாப் மாடல் கார்கள் தெரியுமா?
DMK vs TVK: திமுக-வா? தவெக-வா? எந்த கட்சியில் சேரப்போகிறார் விஜயபாஸ்கர்?
DMK vs TVK: திமுக-வா? தவெக-வா? எந்த கட்சியில் சேரப்போகிறார் விஜயபாஸ்கர்?
Iran-US Peace Talk: “US-Iran ஒப்பந்தம் கையெழுத்தானாலும், இது நடந்துச்சுன்னா சரி வராது“: அப்பாஸ் அராக்சி முக்கிய அறிக்கை
“US-Iran ஒப்பந்தம் கையெழுத்தானாலும், இது நடந்துச்சுன்னா சரி வராது“: அப்பாஸ் அராக்சி முக்கிய அறிக்கை
TN Debt Per Capita: தனி நபர் மீது எவ்வளவு கடன் இருக்கு? தமிழ்நாட்டின் உண்மையான கடன் எவ்வளவு? - வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்
தனி நபர் மீது எவ்வளவு கடன் இருக்கு? தமிழ்நாட்டின் உண்மையான கடன் எவ்வளவு? - வெள்ளை அறிக்கையில் பரபரப்பு தகவல்
Embed widget