AIADMK Madurai Meeting LIVE:தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி அதிமுகதான் - மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

AIADMK Madurai Meeting LIVE Updates: மதுரை வலையங்குளத்தில் அதிமுகவின்  பொன்விழா எழுச்சி மாநாடு  நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

LIVE

Background

மாநாடு பணிகள் தீவிரம்:

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்றபின் அக்கட்சியின்,  மாநில அளவிலான மாநாடு மதுரையில் இன்று நடைபெறுகிறது. இதற்காக வலையங்குளம் அருகே ரிங்ரோடு பகுதியில் பரந்த இடம் தேர்வு செய்யப்பட்டு, அதை சீர்படுத்தி பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அங்கு சென்று அந்த பணிகளை மேற்பார்வை செய்தனர். எஸ்.பி. வேலுமணி மற்றும் தங்கமணி உள்ளிட்டோர் அங்கேயே தங்கியிருந்த இப்பகுதிகளை மேற்கொண்டதாகவும், எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை கூறியதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக அங்கு மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன.

 

பிரமாண்ட முகப்பு:

மாநாடு நடைபெறும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகப்பானது கோட்டை போன்றும், அதில் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ அமைப்புகளும் இடம்பெற்றுள்ளனர். அதற்கு கீழே எடப்பாடி பழனிசாமி படம் வைக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதற்கான இருக்கைகள் போடப்பட்டன. மாநாட்டு மேடையை அலங்கரிக்கும் பணிகளும் நிறைவு பெற்று தயார் நிலையில் உள்ளன.

குவிந்த தொண்டர்கள்:

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் நேற்று காலை முதலே மதுரைக்கு வர தொடங்கினர். பேருந்து, வேன், கார் போன்ற வாகனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. சென்னையில் இருந்து அ.திமு.க. தொண்டர்களை அழைத்துக்கொண்டு சிறப்பு ரயில் நேற்று காலை மதுரை சென்றது. அந்த ரயில் கூடல்புதூர் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்து உற்சாகமாக இறங்கிய தொண்டர்கள் பின்னர், தங்கும் விடுதிகளுக்கு சென்றனர். தொண்டர்களின் படையெடுப்பால், மதுரை நகரில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், மண்டபங்கள் நிரம்பி வழிகின்றன. லட்சக்கணக்கில் குவிந்துள்ள அதிமுக தொண்டர்களுக்கு, கட்சி சார்பில் இன்று சைவ விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நடைபெறும் பகுதியில் போர்டபிள் செல்போன் டவரும் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு திடல் விவரம்:

மாநாட்டு திடல், 65 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் 3 வேளையும் உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மாநாட்டிற்கு வருபவர்களுக்கு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சைவ உணவு பரிமாறப்படுகிறது. அதற்காக 150-க்கும் மேற்பட்ட உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. உணவு தயாரிக்கும் பணியில் மட்டும் பல்லாயிரக்கணக்கானோர்  மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். காய்கறிகள் நறுக்கும் பணி, விதவிதமான உணவுகள் சமைக்கும் பணி என தீவிரமாக நடைபெற்று வருகிறது. உணவு வழங்கப்படும் பந்தலில் நெரிசல் இன்றி தொண்டர்களுக்கு பாக்கு மட்டை தட்டில் உணவு வழங்கவும் போதிய ஆட்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

வரவேற்பு ஏற்பாடு:

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக காலை 8.45 மணிக்கு, அதிமுக தொடங்கி 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் விதமாக சுமார் 51 அடி உயர கம்பத்தில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி  நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, எடப்பாடி பழனிசாமி மாநாட்டு பந்தலுக்கு வரும்போது உயரத்தில் இருந்து பூக்கள் தூவுவதற்காக, ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மாநாட்டு திடல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.  கொடியேற்றுதலுக்கு பிறகு ஜெயலலிதா பேரவை சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு, 3 ஆயிரம் தொண்டர்கள் அணிவகுத்து வந்து மரியாதை அளித்து வரவேற்பு அளிக்க உள்ளனர்.

கலைநிகழ்ச்சிகள்:

பின்னர், மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சியை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். இந்த கண்காட்சி அரங்கத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த விளக்க படங்களும், முக்கிய திட்டங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இடம் பெற்று உள்ளன. மாநாட்டு திடலில், கலை நிகழ்ச்சிகள், கவியரங்குகள் என தொடர்ந்து நடக்கின்றன. மாலை 4 மணிக்கு மாநாட்டு உரை நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

ஈபிஎஸ் தலைமை உரை:

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்று பேசுகின்றனர். செல்லூர் ராஜூ உள்பட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் முன்னிலை வகித்து பேசுகின்றனர். மாலை 5 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு தலைமை உரை நிகழ்த்துகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கால திட்டங்கள், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து அவர் பேசுகிறார். அதன்பின் நன்றியுரையுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன. 

Continues below advertisement
19:19 PM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ. 10 கோடி முறைகேடு நடக்கிறது - எடப்பாடி பழனிசாமி

டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ரூ. 10 கோடி முறைகேடு நடக்கிறது. முறைகேடு பார்களில் கலால் வரி செலுத்தாமல் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

18:47 PM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: புரட்சித் தமிழர் - எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பட்டம்..!

அதிமுக மாநாட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ’புரட்சித் தமிழர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. 

18:42 PM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: 2011-21 வரையிலான 10 ஆண்டு காலம் பொற்கால ஆட்சி - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

மதுரையில் பேசிவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “கொரோனா காலத்தில் 11 மாதம் மக்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் கொடுத்தோம். புயலால் பாதித்த விவசாயிகளுக்கு ரூ. 2, 247 கோடி நிவாரணத் தொகை வழங்கினோம். 2011-21 வரையிலான 10 ஆண்டு கால ஆட்சியை பொற்காலம் என மக்கள் கொண்டாடினர்” என தெரிவித்தார். 

18:40 PM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: கொரோனா பேரிடரை மிக சிறப்பாக கையாண்டது அதிமுக - எடப்பாடி பழனிசாமி

நான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தபோது வறட்சி, புயல் உள்ளிட்ட இடர்களை எல்லாம் சமாளித்து சிறப்பான ஆட்சியை கொடுத்தேன். கொரோனா பேரிடரை மிக சிறப்பாக கையாண்டு மக்கள் நலனை அதிமுக அரசு காத்தது என மதுரை எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். 

18:31 PM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: கொரோனாவை சிறப்பாக கையாண்டது அதிமுக - எடப்பாடி பழனிசாமி

உலகையே அச்சுறுத்திய கொரோனாவை மிகச் சிறப்பாக கையாண்டது - எடப்பாடி பழனிசாமி

18:28 PM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: கஜா புயல் சிறப்பு நிவாரணம் - எடப்பாடி பழனிசாமி

மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக மாநாட்டில் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி புயலை விட வேகமாக செயல்பட்டு கஜா புயல் காலத்தில் பாதிப்புகள் சீரமைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்

18:23 PM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 மின்கட்டண உயர்வு,கதாது அணை கட்டும், அவர்களது கூட்டணி கட்சி காங்கிரஸ் கர்நாடக அரசை கண்டிக்கத் தவறும் தமிழக அரசை கண்டித்து என அதிமுக மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

 

16:27 PM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: மாநாட்டு மேடைக்கு வருகை புரிந்தார் எடப்பாடி பழனிசாமி..!

மதுரையில் நடைபெறும் அதிமுக எழுச்சி மாநாட்டின் மேடைக்கு எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார். 

16:08 PM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: மாநாட்டில் விரைவில் உரையாற்ற இருக்கும் எடப்பாடி கே.பழனிசாமி..!

கழக இலக்கிய அணி செயலாளர் செல்வன் தலைமையில், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், கழக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், நடிகை விந்தியா உள்ளிட்ட பலர் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. தொடர்ந்து மாநாட்டில் எடப்பாடி கே.பழனிசாமி மாநாடு உரை ஆற்றுகிறார்.

15:25 PM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: குவிந்த தொண்டர்கள்.. கடல்போல் காட்சி அளிக்கும் அதிமுக எழுச்சி மாநாடு..!

அதிமுக எழுச்சி மாநாட்டில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளதால் மதுரை வலையங்குளம் கடல்போல் காட்சி அளிக்கிறது. 

12:22 PM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: அதிமுக மாநாடு - மோசமான உணவு

மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டில் மோசமான உணவு வழங்கப்பட்டதால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.

11:48 AM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: அதிமுக மாநாடு - போக்குவரத்து நெரிசல்

மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறுவதால், ரிங் ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

11:48 AM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: 1 டன் ரோஜா மலர்களால் இபிஎஸ்க்கு வரவேற்பு

எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியே ஏற்றியபோது வானிலை பறந்த ஹெலிகாப்டர்  மூலம் 1 டன் ரோஜா மலர்கள், அவர் மீது தூவப்பட்டது. 

11:10 AM (IST)  •  20 Aug 2023

Breaking News LIVE: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது - முதல்வர் ஸ்டாலின்

குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானம் நிலுவையில் இருக்கும்போதே அதற்கு ஒப்புதல் தர மாட்டேன் என்று கூறினார் ஆளுநர். ஆளுநரின் இந்த போக்கை கண்டித்து தான் தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம் நடத்துகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை திமுக ஓயாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

11:07 AM (IST)  •  20 Aug 2023

Breaking News LIVE: நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநர் அல்ல - முதல்வர் ஸ்டாலின்

நீட்  விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தர வேண்டியது ஆளுநர் அல்ல; குடியரசுத தலைவர் தான். மசோதாவை குடியரசுத் தலைவரிடம் கொண்டு சேர்க்கும் வெறும் தபால்காரர்தான் ஆளுநர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

11:04 AM (IST)  •  20 Aug 2023

Breaking News LIVE: தொடக்கத்தில் இருந்தே திமுக நீட்டை எதிர்த்தது - முதல்வர் ஸ்டாலின்

தொடக்கத்தில் இருந்தே திமுக நீட் தேர்வை எதிர்த்து வருகிறது. நீட்டை எதிர்த்து கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அதிமுக கூட எதிர்த்தது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

10:13 AM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: புகைப்பட கண்காட்சி அரங்கத்தை பார்வையிட்ட இபிஎஸ்

அதிமுக மாநாட்டு திடலில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி அரங்கை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

10:12 AM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: அதிமுக மாநாடு - உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றியபோது ஹெரிகாப்டரில் இருந்து மலர் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

10:14 AM (IST)  •  20 Aug 2023

AIADMK Madurai Meeting LIVE: மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது

மதுரை வலையங்குளம் கருப்பசாமி கோவில் அருகே அதிமுகவின்  பொன்விழா எழுச்சி மாநாடு  நடைபெற்று வருகிறது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின்  பொன்விழா எழுச்சி மாநாட்டை கொடி கம்பத்தில் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

09:52 AM (IST)  •  20 Aug 2023

Breaking News LIVE: ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ஆளுநர் இரங்கல்

லடாக் விபத்தில் உயிரிந்த ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததை அறிந்து மிக வேதனை அடைந்தேன் என்று ஆளுநர் ஆர்.ரவி. தெரிவித்துள்ளார். 

09:50 AM (IST)  •  20 Aug 2023

Breaking News LIVE: திமுக உண்ணாவிரதம் - அமைச்சர்கள் பங்கேற்பு

நீட் தேர்வை ரத்துக் செய்யக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், எம்.பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா மற்றும் திமுக எம்எல்ஏக்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

09:48 AM (IST)  •  20 Aug 2023

Breaking News LIVE: திமுக உண்ணாவிரதம் - அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்

நீட் தேர்வை ரத்துக் செய்யக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

09:46 AM (IST)  •  20 Aug 2023

Breaking News LIVE: நீட் தேர்வுக்கு எதிரான திமுக உண்ணாவிரதம் தொடங்கியது

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக உண்ணாவிரதப் போராட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.