Breaking News LIVE: 48 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - வானிலை ஆய்வு மையம்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

Continues below advertisement

LIVE

Background

  • திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
  • திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி
  • திண்டுக்கல் தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆறுதல்
  • தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியது அரசு
  • தஞ்சை, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  • தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் காட்டாற்று வெள்ளம்; சுற்றுலா பயணிகள் செல்லவதற்கு தடை
  • தென்காசி மெயின் அருவியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் கடைகளை சூழ்ந்தது
  • இன்று கார்த்திகை தீபம் என்பதால் திருவண்ணாமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
  • திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் இன்று அதிகாலை ஏற்றப்பட்டது பரணி தீபம்
  • தொடர் மழை காரணமாக திருநெல்வேலியின் பிரதான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியது
  • புதுச்சேரியில் மீண்டும் கொட்டிய கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்
  • கிருஷ்ணகிரியில் தடுப்பணையில் ஏற்பட்ட சேதம் காரணமாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொட்டும் மழையிலும் நனைந்தபடி பள்ளி சென்ற மாணவர்கள்
  • தூத்துக்குடி தாமிரபரணி கரையோர மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு; முழு கொள்ளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி
  • ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Continues below advertisement
12:02 PM (IST)  •  13 Dec 2024

48 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி - வானிலை ஆய்வு மையம்

48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வங்கக்கடலில் உருவாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

10:28 AM (IST)  •  13 Dec 2024

கோவில்பட்டியில் வீடுகளைச் சூழ்ந்த மழைநீர்! வெள்ளத்தில் மிதக்கும் பொருட்கள்!

கோவில்பட்டியில் வெளுத்து வாங்கிய மழையால் பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால், பொருட்கள் மழைநீரில் மிதக்கிறது. 

07:54 AM (IST)  •  13 Dec 2024

குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு! சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

தொடர்ந்து கனமழை காரணமாக குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

07:12 AM (IST)  •  13 Dec 2024

திருவண்ணாமலையில் அதிகாலையிலே ஏற்றப்பட்ட பரணி தீபம்

திருவண்ணாமலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு, அதிகாலையிலே அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.