BREAKING: வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தினேன் - கோரிக்கைகளைப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்
பிரேக்கிங் செய்திகளை உடனக்கு உடன் வழங்கும் லைவ் பிளாக் பகுதி இது. உடனடி செய்திகளை வரிசை முறையில் இப்பகுதியில் நீங்கள் அறியலாம்.
நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை ரத்துசெய்ய கோரிக்கை விடுத்துள்ளோம். தடுப்பூசிகள் தேவையான அளவுக்கு தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்..!
டெல்லியில், பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக இன்று விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது சென்று கொண்டிருக்கிறார். அவருடன் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றுள்ளனர்.
சகிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக கூட்டம் மற்றும் விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி., சண்முகம் பங்கேற்ற கூட்டங்களில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லாத சசிகலா, அதிமுகவினருடன் பேசுவதாக ஆடியோ வெளியிட்டு வருவதற்கும், அதிமுகவிற்கு வருவதாக கூறியதற்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Background
நடிகர் ரஜினிகாந்த், உடல் நல பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக நாளை மறுநாள் ஜூன் 19 ம் தேதி அமெரிக்கா புறப்படுகிறார். அங்கு 3 மாதங்கள் தங்கும் ரஜினிகாந்த், உடல் முழு பரிசோதனை செய்து முடித்த பின்பாக இந்தியா திரும்புகிறார். அவர் நடித்து வந்த அண்ணாத்தா படப்பிடிப்பு முடிந்ததாக கூறப்பட்ட நிலையில், ரஜினி காந்த் இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளார். ஏற்கனவே அவர் அறுவை சிகிச்சை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -