BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!
பிரேக்கிங் செய்திகளை உடனக்கு உடன் வழங்கும் லைவ் பிளாக் பகுதி இது. உடனடி செய்திகளை வரிசை முறையில் இப்பகுதியில் நீங்கள் அறியலாம்.
டாக்சின் மதன் யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!
சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!
ஆபாச புகாரில் யூடியூப்பர் பப்ஜி மதனை போலீசர் தேடி வந்த நிலையில், அவரை பிடிக்க சேலம் மற்றும் சென்னை பெருங்களத்தூரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு முன் ஜாமீன் கேட்டு மதன் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் பெருங்களத்தூரில் குடும்பத்துடன் மதன் வசித்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார், மதனின் மனைவி மற்றும் அவரது தந்தையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதன் எஸ்கேப் ஆன நிலையில், அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராம்குமார் என்பவர், பிளஸ் 2 தேர்வு ரத்து அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் கருத்து தெரிவித்த நீதிபதி, ‛இந்த விவகாரத்தில் தமிழக அரசின் கருத்து கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாது,’ என்று, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தார்.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா, டேராடூனில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிபிசிஐடி போலீசார் அவரை பிடிக்க அங்கு விரைந்தனர். ஆனால் அவர் அங்கிருந்து தலைமறைவானார். இதைத் தொடர்ந்து டில்லி காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்தாக வந்த தகவலை தொடர்ந்து, சிபிசிஐடி தனிப்படையினர் சிவசங்கர் பாபாவை கைது செய்தனர். அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சென்னை அழைத்து வர உள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால், அம்மாநில ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தாஜ்மஹால் சுற்றுலா பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யும் 650 பேர் மட்டும் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
சினிமா நடிகை சாந்தினியை ஏமாற்றியதாக அளித்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி, மணிகண்டனின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மணிகண்டன் கைதாக வாய்ப்புள்ளது.
Background
அரியலூர் மாவட்டம் உடையான்பாளையம் பகுதியில் 10 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் கிணறுகள் அமைக்க தமிழக அரசுக்கு ஓஎன்ஜிசி விண்ணப்ப கடிதம் அனுப்பியுள்ளது. கருத்து கேட்பு அவசியம் இல்லை என்பதால் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு அந்நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும். ஹைட்ரோ கார்பன் ஏலங்களை ரத்து செய்யக்கோரி முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -