Breaking LIVE:  நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜா நியமனம்

நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக நான்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

கீர்த்தனா Last Updated: 06 Jul 2022 08:23 PM
Breaking LIVE:  நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜா நியமனம்

மாநிலங்களவை நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங் ராஜினாமா

மத்திய உருக்குத்துறை அமைச்சர் ஆர்.சி.பி.சிங்கும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் 

மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா..!

மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா

மத்திய அமைச்சரவையிலிருந்து முக்தர் அபாஸ் நக்வி ராஜினாமா. குடியரசுத் துணைத்தலைவர்  தேர்தலில் முக்தர் அப்பாஸ் நக்வி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியான நிலையில் ராஜினாமா.

என்ஜீன் செயலிழப்பு - விமானம் அவசர தரையிறக்கம்

என்ஜீன் செயலிழப்பால் விஸ்தாரா பயணிகள் விமானம் டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது 

சிரைக் காவலரை தாக்கிய விசாரணைக்கைதி

வேலூர் மத்திய சிறையில் சிறைக் காவலர் கிருபாகரனை தாக்கிய விசாரணைக் கைதி ராஜா மீது வழக்குப்பதிவு. உணவு வழங்கும் போது வரிசையில் வர அறிவுறுத்திய சிறைக் காவலர் மீது கைதி ராஜா தாக்குதல்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்.. விராட், ரோகித் இல்லை கேப்டன்... யார் தெரியுமா..?

டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினில் ஜூலை 22-ம் தேதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். 

உசிலம்பட்டியில் வெடி வெடிக்கத்தடை

மதுரையில் உள்ள உசிலம்பட்டி பகுதியில் வெடிவெடிக்க நகராட்சி நிர்வாகம் தற்காலிமாக தடைவிதிப்பு. வெடி வெடிப்பதால் காற்று மாசு அடைவதுடன், மக்களுக்கும் பாதிப்படைவதால் தடைவிதிப்பு : நகராட்சி நிர்வாகம்

பள்ளியில் விஷப்பூச்சி கடித்து மாணவன் பலி தாளாளர் கைது

மதுரையில் உள்ள கொட்டாம்பட்டி பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 8-ம் வகுப்பு மாணவன் இறந்த வழக்கில் தாளாளர் கைது. பெற்றோர் போராட்டத்தை அடுத்து பள்ளி தாளாளர் தேன்மொழியை காவல்துறையினர் கைது செய்தனர்.

எஸ்.பி.வேலுமணிக்கு நண்பர் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை!

கோவை வடவள்ளி அருகே உள்ள சந்திரசேகர வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவர் என்று அறியப்படுகிறார்.இவர் நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை!

கோவை வடவள்ளி அருகே உள்ள சந்திரசேகர வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவர் என்று அறியப்படுகிறார்.இவர் நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்!

சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையத்தின் வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை மாவட்டத்திற்கு கனமழை வாய்ப்பு எச்சரிக்கை- சென்னை வானிலை ஆய்வு மையம்

 நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆயுவு மையம் எச்சரித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆண்டு அட்டவணை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். 

அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் 10,371 காலிப்பையிடங்களை நிரப்ப ஆண்டு அட்டவணை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.  இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணைவரும் செப்டம்பரில் வெளியிட்ப்படும். மேலும்,  டிசம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீரர் ஜேனிக் சின்னரை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் நட்சத்திர வீரர் நோவோக் ஜோகோவிச்.

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு QR-code அடையாள அட்டை

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க QR-code உடன் கூடிய அடையாள அட்டை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் அதிநவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி அனுமதிக்க திட்டமிட்டபட உள்ளதாக தகவல்.

இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 சரிவு!

ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.37920 ஆக விற்பனை ஆகிறது. தங்கம் ஒரு கிராம் ரூ.65 குறைந்து ரூ.4,740 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் ரூ. 2 குறைந்து ரூ.62.50 ஆக விற்பனை.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 16,159 ஆக உயர்வு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,159 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றால் 28 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Background

மழை காரணமாக நீலகிரி மாவட்டட்தின் உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை இன்று (ஜூலை.06) அளிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதம் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.


மேலும், நீலகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


சென்னை வானிலை மையம்


தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாள்களுக்கு ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.  இது குறித்து நேற்று (ஜூலை.05) வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தாவது:


”06.07.2022 மற்றும் 07.07.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


08.07.2022 மற்றும் 09.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


இன்று குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழ்நாடு கடலோரப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மேலும் வரும் ஜூலை 9ஆம் தேதி வரை இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா - கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.