பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது பொதுச்செயலாளரின் முடிவு அல்ல. அது அதிமுக தொண்டர்களின் முடிவு என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதிமுக உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அதிமுக அறிவித்த பிறகு, எடப்பாடி பழனிசாமி அதுதொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் தான், கூட்டணி முறிவு என்பது தொண்டர்களின் முடிவு என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். சேலம் மாவட்டம் திருவாக்கவுண்டனூரில் நடைபெற்ற, பூத் கமிட்டியை வலுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசமி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அப்போது, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்ததோடு,  மாநிலத்தின் உரிமயை காக்க  நாடாளுமன்ற தேர்தலை  அதிமுக தலைமையிலான பிரமாண்ட கூட்டணி சந்திக்கும் என கூறினார். ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில்  பிரதமர் வேட்பாளரை அறிவித்த பிறகா  தேர்தலை சந்திக்கின்றனர்? எனவும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.


திமுகவை சாடிய ஈபிஎஸ்:


தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்துகொண்டு இருந்தார்கள், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றது. தற்போது தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டவைகள் அதிகம் நடைபெறுகிறது. முதியோர்களை குறி வைத்து கொலை செய்து நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இளைஞர்கள் போதைப் பொருட்களால் சீரழிந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் கஞ்சா சர்வ சாதாரணமாக கிடைக்கிறது.காரணம் திறமையற்ற அரசாங்கம், பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது இதனால் கட்டுப்படுத்த தவறி அரசாங்கம் தான் திமுக அரசாங்கம்" என்று குற்றம்சாட்டினர்.


தொண்டர்களுக்கு அறிவுரை:


மேலும், “அதிமுக வலிமை வாய்ந்த கட்சி இரண்டு கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சி அதிமுக. இரண்டு கோடி உறுப்பினர்களின் எண்ணத்தையின் அடிப்படையில் தான் முடிவெடுக்கப்பட்டது. தமிழகம் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதியிலும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றியை பெறுவார்கள்.இந்த பூத் கமிட்டி கூட்டம் தமிழக முழுவதும் பிரதிபலிக்க வேண்டும். அதிமுக பலமாய்ந்த கட்சி வலிமை வாய்ந்த கட்சி என்றும் கூறினார். ஒரு கட்சியின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அனைவரின் சம்மதத்துடன் தான் நிறைவேற்றப்பட்டது என்று எண்ணி கொள்ளவேண்டும் அதுதான் இறுதி முடிவு. அதிமுகவில் அனைவரின் ஆலோசனையின் முடிவில் தான் கூட்டணி விலகல் என்பதை தெரிவிக்கிறேன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன். அதிமுக என்பது மக்களுக்கு சேவை செய்கின்ற இயக்கம் என்றார். அதிமுக தமிழக மக்களின் உரிமைக்காக மக்களை சந்தித்து வேட்பாளரை வெற்றிபெற வாக்குகளை சேகரிப்போம்” என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினார்.