மேலும் அறிய

முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்ப நாய் உதவியுடன் போலீஸ் சோதனை

கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இரண்டாவது முறையாக முதல்வர் ரங்கசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இரண்டாவது முறையாக முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வருகிறது.  கவர்னர் மாளிகை, முதலமைச்சர் வீடு, பிரெஞ்சு தூதரகம், ஜிப்மர் மருத்துவமனை, ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு இமெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் வந்தது.

தொடர்ந்து கடந்த வாரத்தில் நட்சத்திர விடுதிகள், ரெஸ்டாரண்ட்டுகள் ஆகியவற்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்தது. போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும் மிரட்டல் தொடர் கதையாகி உள்ளது.

திணறும் சைபர் கிரைம் போலீஸ்

வெடிகுண்டு மிரட்டல் நபரை போலீசார் கண்டறிய முடியவில்லை. புதுவை சைபர் கிரைம்போலீசாரால் துப்புதுலக்க முடிவில்லை. இதனையடுத்து மத்திய சைபர் கிரைம் போலீசார் உதவியை நாடியுள்ளனர். இந்த நிலையில் நேற்று கவர்னர் புதுச்சேரி மாளிகைக்கு இமெயிலில் ஒரு தகவல் வந்தது. அதில், கவர்னர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என தகவல் இருந்தது.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. போலீசார் மோப்ப நாயுடன் வந்து சோதனையிட்டனர் . சோதனையில், ஒன்றுமில்லை என தெரிந்தவுடன் இதுவும் வதந்தி என போலீசார் கூறிவிட்டு சென்று விட்டனர். தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 

முதலமைச்சர் ரங்கசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ரங்கசாமி இல்லம் மற்றும் அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது, தொடர்ந்து முதல்வர் இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

தொடந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவம் பார்க்க வருகின்றனர். இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

அவர்கள், அங்கிருந்த நோயாளிகளையும் உறவினர்களையும் உடனடியாக வெளியேற்றிவிட்டு அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஜிப்மர் வளாகத்தில் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, நிர்வாக அலுவலகம், புற்றுநோயாளிகள் பிரிவு, மகப்பேறு மருத்துவமனை என பல்வேறு பிரிவுகள் அமைந்திருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவசர சிகிச்சைப் பிரிவு, புற நோயாளிகள் பிரிவு மற்றும் நோயாளிகள் தங்கி இருக்கும் வார்டுகள் மற்றும் ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸார் மோப்ப நாய்கள் உதவிகளுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஜிப்மர் வளாகத்தில் தங்கி இருந்த அனைத்து நோயாளிகளின் உறவினர்களும் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, புதுச்சேரி முல்லா வீதியில் உள்ள குப்தா பள்ளி வாசலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
"கிறிஸ்தவம் என்றால் புனிதம்... என் பெயர் ஐயப்பன்" - கிறிஸ்துமஸ் விழாவில் திமுக எம்எல்ஏ ஆச்சரிய பேச்சு
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
வரலாற்று வெற்றியா? அடிச்சுவிடும் பாஜக - புள்ளி விவரங்களுடன் கிழித்து தொங்க விடும் ஜான் ப்ரிட்டாஸ்
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Embed widget