பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று சென்ற திருப்பதி - மன்னார்குடி இடையிலான பாமினி விரைவு ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்து திருப்பதி செல்லும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Continues below advertisement

திருப்பதி - மன்னார்குடி இடையிலான பாமினி விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் வியாபாரிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் இந்த கோரிக்கையை மத்திய ரயில்வே துறை அமைச்சரிடம் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கொண்டு சென்ற நிலையில் உடனடியாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து திருப்பதி - மன்னார்குடி இடையிலான பாமினி விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட்டிருந்தார். இதை அடுத்து இன்றைய தினம் மன்னார்குடியில் இருந்து திருப்பதி சென்ற பாமினி விரைவு ரயில் முதன்முறையாக பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று திருப்பதிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு சென்றது. இதற்காக பண்ருட்டி ரயில் நிலையம் வந்த பாமினி விரைவு ரயிலுக்கு மேள வாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து ரயில் ஓட்டுனர் உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்து பண்ருட்டியில் இருந்து திருப்பதி சென்ற பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 

இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், “பிஜேபியில் உள்ளவர்கள் சங்கிகள் விசிகவில் உள்ளவர்கள் சொங்கிகள். திருமாவளவன் பாஜகவை பார்த்து பயந்து போய் உள்ளார். அதனால் தான் பாஜகவை பற்றி எல்லா இடங்களிலும் பேசி வருகிறார். பாஜக பெரிய கட்சி  விசிகவின் ஒட்டுமொத்த கட்சியின் எண்ணிக்கை பாஜகவின் பட்டியல் அணி” என்று தெரிவித்துள்ளார்.

Continues below advertisement