பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தார். 






இன்று காலை  அதிமுக பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில், அண்ணாமலை மற்றும் பாஜக  மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைரும்  எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரான திரௌபதி முர்முவிற்கு ஆதரவளிக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.


அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பொதுக்குழுக்கூட்டம் நடத்த அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர்.  


ஓ.பன்னீர்செல்வத்துடன், அண்ணாமலை, சி.டி ரவி சந்திப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் சந்திப்பு தமிழக அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண